»   »  பன்சாலி, பாக்யராஜ் வழியில் கஸாலி!

பன்சாலி, பாக்யராஜ் வழியில் கஸாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பன்சாலி - பாக்யராஜ் - கஸாலி!- வீடியோ

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, நம்ம திரைக்கதை மன்னன் பாக்யராஜ் வழியில் கோலிவுட்டில் பயணிக்க ஆசைப்படுவதாகச் சொல்கிறார் மனுசனா நீ படத்தின் இயக்குநர் கஸாலி. எதில் என்கிறீர்களா.... இயக்கி இசையமைப்பதில்தான்.

H3 சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் கஸாலி கதை, திரைக்கதை எழுதி இசையமைத்து இயக்கும் படத்திற்கு 'மனுசனா நீ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16 வெளியீடாக வரவுள்ள 'மனுசனா நீ' படத்தின் பெயரே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது.

Gassali's Manusanaa Nee

பொதுவாக படத்தின் இயக்குநர்களே ஒளிப்பதிவாளர்களாக நிறைய படங்களில் பணியாற்றியுள்ளனர். ஆனால் இயக்குநர்கள் இசையமைப்பாளர்களாக பணியாற்றியது மிக சொற்ப அளவே இருக்கும். பாலிவுட்டில் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி போன்ற படங்களுக்கு தானே இசையமைத்துள்ளார் பன்சாலி.

தமிழில் பாக்யராஜ் தன் படங்களுக்கு இசையமைத்துள்ளார். டி.ஆர். தன் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த வரிசையில் மனுசனா நீ படத்திற்கு இயக்குநர் கஸாலி இசையைமைத்துள்ளார்.

Gassali's Manusanaa Nee

"விரைவில் தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆக முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சிறிய படங்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறேன். எந்தெந்த வழிகளிலெல்லாம் சினிமாவிற்கு வருமானம் வருகிறது என்ற விபரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். என்னுடைய இடத்திலேயே சிறிய படங்களை வெளியிடுவதற்காக ஸ்டூடியோ நிறுவும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

மனுசனா நீ படம் வெளியிட்டபின் மற்ற சிறிய படங்களை வெளியிடும் வேலை துவங்கும்," என்றார்.

Read more about: new movie, கஸாலி
English summary
Gassali's maiden directorial musical Manusanaa Nee will be releasing on Feb 16th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil