Don't Miss!
- News
என்ன சொல்றேன்னா.. லைட்டா போதை வரும்! டாஸ்மாக் சரக்குக்கு பதில் இதை விற்கலாம்! பேரரசுவின் அடடே ஐடியா!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
கௌதம் கார்த்திக்கின் "ஆனந்தம் விளையாடும் வீடு" டீசர் தேதி வெளியானது!
சென்னை : இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் உடன் ஆனந்தம் விளையாடும் வீடு உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சேரன், சரவணன்,டேனியல் பாலாஜி,வெண்பா,மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி என பலர் நடித்து வருகின்றனர்.
விஜய்க்காக என்னை மாற்றிக் கொண்டேன்.. மேடையில் மனம் திறந்து பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்!
கூட்டுக் குடும்பத்து கதையம்சத்தில் அனைவருக்கும் பிடிக்கின்ற வகையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் தேதி இப்பொழுது வெளியாகி உள்ளது.

அண்ணன் தம்பிகளின் பாசம்:
பாசத்தை கொண்டாடும் குடும்ப கதையம்சத்தில் திரைப்படங்கள் எப்போது வெளியானாலும் தமிழ் ரசிகர்கள் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கூட்டுக்குடும்பத்தில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை பற்றியும் கூற இருக்கிறது ஆனந்தம் விளையாடும் வீடு.

ஆனந்தம் விளையாடும் வீடு
இந்த படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி,வண்ண ஜிகினா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்பொழுது பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தை இயக்கி வருகிறார். கௌதமுக்கு ஜோடியாக இளம் நடிகை ஷிவத்மிகா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

குடும்ப பின்னணியில்
மேலும் இயக்குனரும் நடிகருமான சேரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரவணன், டேனியல் பாலாஜி,வெண்பா, மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களைத் தொடர்ந்து குடும்ப பின்னணியில் அடுத்ததாக ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியாக இருக்க இப்படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது .

செப்டம்பர் 24ஆம் தேதி டீசர்
கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வந்த ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதை அடுத்து அடுத்த கட்டமாக டீசர் வெளியாக உள்ளது. அதன்படி செப்டம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைத்து வருகிறார்