»   »  இது, இதற்காகத் தான் அம்மா 'ஓபிஎஸ்'ஐ தேர்ந்தெடுத்தார்: கவுதமி

இது, இதற்காகத் தான் அம்மா 'ஓபிஎஸ்'ஐ தேர்ந்தெடுத்தார்: கவுதமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் துணிந்து ஒரு முடிவு எடுத்துள்ளதை நடிகை கவுதமி வரவேற்றுள்ளார்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் நான் முதல்வராகப் போகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்தார். அவரின் பேச்சைக் கேட்ட மக்களோ, இது இட்லி என்றால் சட்னி கூட நம்பாது என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள்.

Gautami appreciates CM OPS

இந்நிலையில் தான் ஓ. பன்னீர்செல்வம் துணிந்து ஒரு முடிவு எடுத்து சசிகலாவை எதிர்த்து நிற்கிறார். சமூக வலைதளங்களில் சசிகலாவை கழுவிக் கழுவி ஊற்றும் தமிழக மக்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வருகிறார்கள்.

இந்த பரபரப்பான சூழலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரசிகையான நடிகை கவுதமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இதற்காகத்தான் அம்மா OPSஐ தேர்ந்தெடுத்தார் 🙏 தன் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர் அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காபாற்றினார் என தெரிவித்துள்ளார்.

English summary
Actress Gautami tweeted that, 'This is why #Amma chose #OPS 🙏 he has the courage to follow his CONSCIENCE! This is #JusticeForTN 🙏🙏🙏 and NOW #JusticeForAmma narendramodi'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil