»   »  தனுஷுக்கு ஜோடியாக என் மகளா?: கவுதமி விளக்கம்

தனுஷுக்கு ஜோடியாக என் மகளா?: கவுதமி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் மகள் படிப்பில் பிசியாக உள்ளார். படிப்பை முடித்த பிறகு நடிக்க வருவதா வேண்டாமா என்பதை அவர் முடிவு செய்வார் என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

உலக நாயகனுடன் 13 ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்த நடிகை கவுதமி அண்மையில் பிரிந்தார். கமலை பிரியும் முடிவை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.

நான் முதலில் என் மகள் சுப்புலட்சுமிக்கு ஒரு தாய். நல்ல தாயாக இருக்க மன அமைதி வேண்டும் என்று கவுதமி தெரிவித்தார்.

கவுதமி

கவுதமி

சுப்புலட்சுமிக்கு தனது தாயை போன்று நடிகையாகும் ஆசை வந்துள்ளது என்றும், இதையடுத்து கவுதமி அவரை ஹீரோயினாக்க தனுஷை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் செய்திகள் வெளியாகின.

தனுஷ்

தனுஷ்

கவுதமி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தனுஷ் தனது வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ஹீரோயினாக சுப்புலட்சுமியை போட முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபட்டது.

சுப்புலட்சுமி

சுப்புலட்சுமி

சுப்புலட்சுமி தனுஷ் படத்தில் நடிப்பது குறித்து கவுதமி கூறுகையில், என் மகள் தற்போது படிப்பில் பிசியாக உள்ளார். படித்து முடித்த பிறகு நடிக்க வருவதா இல்லையா என்பதை அவர் முடிவு செய்வார் என்றார்.

வதந்தி

வதந்தி

வழக்கமாக வதந்திகள் பற்றி நான் விளக்கம் அளிப்பது இல்லை. ஆனால் இது என் மகளின் வாழ்க்கை பற்றிய வதந்தி என்பதால் விளக்கம் அளிக்கிறேன். இது போன்ற வதந்திகள் என் மகளின் படிப்பை பாதித்துவிடக் கூடாது என்றார் கவுதமி.

English summary
Gautami said that her daughter Subbulakshmi is not acting in Dhanush's VIP2. She added that Subbu is busy with studies right now.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil