»   »  மகளுக்கு நல்ல தாயாக இருக்க கமலை பிரிந்த கவுதமி#Gautami

மகளுக்கு நல்ல தாயாக இருக்க கமலை பிரிந்த கவுதமி#Gautami

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மகளுக்கு நல்ல தாயாக இருக்க கமல் ஹாஸனை பிரியும் கடினமாக முடிவை எடுத்ததாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

தனது கணவர் சந்தீபிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு கவுதமி நடிகர் கமல் ஹாஸனுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தார். கவுதமிக்கு சந்தீப் மூலம் சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

#Gautami leaves Kamal to be a good mom

கமலுடன் 13 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த கவுதமி அவரை பிரிவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். கமலை பிரிவதை தன்னாலேயே நம்ப முடியவில்லை என்று கவுதமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இது தான் என் வாழ்வில் எடுத்துள்ள மிகவும் கடினமான முடிவு. இந்த முடிவு எனக்கு அத்தியாவசியமானது. நான் முதலில் ஒரு தாய். என் மகளுக்கு நல்ல தாயாக இருக்கும் பொறுப்பு உள்ளது. அதற்கு நான் மனஅமைதியுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மகளுக்காகவும், தனது மன அமைதிக்காகவும் கமலை பிரிந்துள்ளாராம் கவுதமி.

English summary
Actress Gautami has left her partner Kamal Haasan after 13 years to be a good mother to daughter Subbulakshmi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil