»   »  கமலை பிரிய 2 ஆண்டுகளாக யோசனையில் இருந்த கவுதமி#Gautami

கமலை பிரிய 2 ஆண்டுகளாக யோசனையில் இருந்த கவுதமி#Gautami

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸனை பிரிவது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே யோசனை செய்து வந்துள்ளார் நடிகை கவுதமி.

நடிகை கவுதமி உலக நாயகன் கமல் ஹாஸனை திருமணம் செய்யாமல் அவருடன் கடந்த 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். கமல் தனது மனைவி சரிகாவை பிரிந்த பிறகு கவுதமியுடன் சேர்ந்துவிட்டார்.

இந்நிலையில் கமல் ஹாஸனை பிரிவதாக கவுதமி ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். அவர் தனது அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கமல்

கமல்

கமல்ஹாஸனும், நானும் பிரிந்துவிட்டோம் என்பதை தெரிவிக்கவே என் இதயம் நொறுங்குகிறது. 13 ஆண்டுகள் சேர்ந்து இருந்த பிறகு இது தான் நான் என் வாழ்க்கையில் எடுத்துள்ள மிகவும் அதிர்ச்சியான முடிவு.

உறவு

உறவு

ஒரு உறவில் உள்ளவர்களின் பாதைகள் பிரிந்துவிடும்போது சேர்ந்து இருக்க ஒன்று கனவுகளை விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது உண்மையை ஏற்றுக் கொண்டு பிரிய வேண்டும்.

2 ஆண்டுகள்

2 ஆண்டுகள்

இந்த இதயத்தை நொறுக்கும் உண்மையை ஏற்றுக் கொள்ள எனக்கு நீண்ட காலம் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுத்தது. அதன் பிறகே இந்த முடிவுக்கு வந்தேன்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

யார் மீதும் குற்றம் சுமத்துவதோ, என் மீது பரிதாபப்படச் செய்வதோ எனது நோக்கம் அல்ல. வாழ்வில் மாற்றம் இன்றியமையாதது. அனைத்து மாற்றங்களும் நாம் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது.

முடிவு

முடிவு

இது தான் என் வாழ்வில் எடுத்துள்ள மிகவும் கடினமான முடிவு. இந்த முடிவு எனக்கு அத்தியாவசியமானது. நான் முதலில் ஒரு தாய். என் மகளுக்கு நல்ல தாயாக இருக்கும் பொறுப்பு உள்ளது. அதற்கு நான் மனஅமைதியுடன் இருக்க வேண்டும்.

ரசிகை

ரசிகை

நான் திரையுலகிற்கு வரும் முன்பே கமல் ஹாஸனின் ரசிகை. இனியும் அவர் ரசிகையாக இருப்பேன். அவரது சாதனைகளை பார்த்து மகிழ்வேன். சோதனைகளில் அவருடன் இருந்தது எனக்கு அற்புதமான தருணம்.

படங்கள்

படங்கள்

கமலின் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அவர் இன்னும் நிறைய சாதிப்பார். அவரை பாராட்ட நான் எதிர்பார்த்து காத்துள்ளேன்.

வாழ்க்கை

வாழ்க்கை

என் வாழ்க்கை எப்பொழுதும் உங்கள் மத்தியில் தான். அதனால் தான் என் வாழ்க்கையின் இந்த முக்கிய முடிவை உங்களிடம் தெரிவிக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக உங்களின் அன்பும், ஆதரவும் கிடைத்துள்ளது. என் வாழ்க்கையின் வலிமிக்க தருணங்களையும் நான் கடந்து செல்ல உதவுவதற்கு நன்றி.

English summary
Actress Gautami has taken two years to realise the change in her life and to take the decision to leave Kamal Haasan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil