»   »  ஒருவழியாக செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸாகும் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா'

ஒருவழியாக செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸாகும் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அச்சம் என்பது மடமையடா படம் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸாகும் என்று இயக்குனர் கவுதம் மேனன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

கவுதம் மேனன் தயாரித்து இயக்கியுள்ள படம் அச்சம் என்பது மடமையடா. சிம்பு, மஞ்சிமா மோகன் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.


கபாலி

கபாலி

அச்சம் என்பது மடமையடா கடந்த ஜூலை மாதமே ரிலீஸாவதாக இருந்தது. பின்னர் ரஜினியின் கபாலி ரிலீஸால் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகும் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.


சிம்பு

சிம்பு

சிம்பு படப்பிடிப்பில் ஒத்துழைக்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவது இல்லை என்று புகார்கள் எழுந்தன. இதனால் படப்பிடிப்பை முறையாக நடத்தி முடிக்க முடியாமல் கவுதம் திணறியதாக கூறப்பட்டது.


ஆகஸ்ட்

ஆகஸ்ட்

இப்படி அச்சம் என்பது மடமையடா படம் எப்பொழுது தான் ரிலீஸாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கவுதம் அறிவித்தார். ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போனது.


செப்டம்பர் 9

கவுதம் ட்விட்டரில் நேற்று கூறியிருப்பதாவது, அச்சம் என்பது மடமையடா இன்றில் இருந்து ஒரு மாதத்தில் ரிலீஸாகும். அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அறிவிக்க காத்திருந்தோம். தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. நல்ல தேதி. IX என தெரிவித்துள்ளார்.


விண்ணைத் தாண்டி வருவாயா

விண்ணைத் தாண்டி வருவாயா

முன்னதாக கவுதம் மேனன், சிம்பு கூட்டணியில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தால் சிம்புவின் காதலியாக நடித்த த்ரிஷாவுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.


English summary
Director Gautham Menon tweeted that, "AYM/SSS- releasing exactly one month from today.Just about finishing all work and hence we waited to announce.All set now!And a nice date.IX."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil