»   »  தனுஷுக்கு வில்லன் நானா... இல்லவே இல்லை என்கிறார் கௌதம் மேனன்

தனுஷுக்கு வில்லன் நானா... இல்லவே இல்லை என்கிறார் கௌதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்கப் போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என மறுத்துள்ளார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என காதலையும், காக்கியையும் களந்துகட்டி விளையாடி, வெற்றிப் படங்களைத் தருவதில் வல்லவர் இயக்குநர் கௌதம் மேனன்.

இவரது படங்களில் நாயகர்களைப் போலவே வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். காக்க காக்க ஜீவன், என்னை அறிந்தால் அருண் விஜய், வேட்டையாடு விளையாடு டேனியல் என உதாரணங்கள் பல கூறலாம்.

தனுஷ் - கௌதம் கூட்டணி...

தனுஷ் - கௌதம் கூட்டணி...

அந்தவகையில் கௌதம் தற்போது தனுஷ் நாயகனாக நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக தனுஷ்-கௌதம் கூட்டணி அமைத்துள்ளனர்.

மேகா ஆகாஷ்...

மேகா ஆகாஷ்...

இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தனுஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

டபுள் ஆக்டிங்...

டபுள் ஆக்டிங்...

இந்தப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். தனுஷின் முதல் கெட்டப் சமீபத்தில் வெளியானது. வழக்கம் போலவே இப்படமும் கௌதம் ஸ்பெஷல் ஸ்டைலிஷான காதல் மற்றும் காவல்துறை சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லனாக கௌதம்...

வில்லனாக கௌதம்...

இதற்கிடையே இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக கௌதம் மேனனே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. முன்னதாக எஸ்.ஜே.சூர்யாவை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தது. ஆனால், தனுஷுக்கு வில்லனாக நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் யாரும் எதிர்பார்த்தது போல அமையவில்லை என்றும், அதனால் கவுதம் மேனனே நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது.

வதந்தி...

வதந்தி...

ஆனால், இது வெறும் வதந்தி என விளக்கமளித்துள்ளார் கௌதம். இது தொடர்பாக ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என கௌதம் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

ஏற்கனவே தனது படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கௌதம். எனவே, இப்படத்தின் மூலம் அவர் முழு நேர நடிகராகப் போவதாக நம்பப் பட்டது. ஆனால், தற்போது இந்தத் தகவலை கௌதம் மறுத்துள்ளதால், தனுஷின் வில்லன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யா...

சூர்யா...

சமீபகாலமாக ஹீரோக்களே வில்லன்களாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சூர்யா நாயகனாகவும், வித்தியாசமான வில்லனாகவும் நடித்த 24 படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தனுஷே வில்லன்?

தனுஷே வில்லன்?

எனவே, இந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு வில்லனாக தனுஷே நடிப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. இதனால் தான் வில்லன் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Director Gautham menon has denied that he is not acting as villain in shanush film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil