»   »  சூர்யாவுக்காக தயாராகி தனுஷ் மேல் பாயும் தோட்டா: இது கௌதம் மேனன் கணக்கு

சூர்யாவுக்காக தயாராகி தனுஷ் மேல் பாயும் தோட்டா: இது கௌதம் மேனன் கணக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷை வைத்து கௌதம் மேனன் இயக்கும் படத்திற்கு என் மேல் பாயும் தோட்டா என பெயர் வைக்கப் போகிறாராம். சூர்யாவுக்காக தயார் செய்யப்பட்ட கதையை தனுஷை வைத்து எடுக்க உள்ளாராம்.

கௌதம் மேனன் சூர்யாவுக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்து காத்துக் கொண்டிருந்தார். ஆனால் சூர்யாவும் வருவதாகத் தெரியவில்லை, படமும் துவங்கப்படுவதாக இல்லை. இந்நிலையில் தான் அவர் தனுஷை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார்.

எத்தனையோ ஹீரோக்கள் இருக்கையில் தனுஷை கௌதம் தேர்வு செய்தது டிவி நிகழ்ச்சி மூலமாம்.

தனுஷ்

தனுஷ்

க்ரீன் டீ வித் கௌதம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கௌதம் தனுஷை பேட்டி எடுத்துள்ளார். அப்போது தான் அவர் தான் வைத்திருக்கும் கதையை தனுஷிடம் கூறியுள்ளார்.

சூப்பர்

சூப்பர்

கௌதம் கூறிய கதை தனுஷுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. சார், படத்தை எப்பொழுது துவங்கலாம் என்று கேட்டுள்ளார்.

மார்ச்

மார்ச்

தனுஷ், கௌதம் மேனன் முதன்முதலாக சேரும் படத்திற்கு என் மேல் பாயும் தோட்டா என்று பெயர் வைக்கிறார்களாம். படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது.

2 மாதம்

2 மாதம்

என் மேல் பாயும் தோட்டா படப்பிடிப்பை பரபரவென நடத்தி இரண்டே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளார் கௌதம். இதற்காக தனுஷ் மொத்தமாக 2 மாத கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்துள்ளார்.

சூர்யா

சூர்யா

தனுஷ் நடிக்க உள்ள படம் சூர்யாவுக்காக ரெடி செய்தது. படத் தலைப்பு கூட அவருக்காக தேர்வு செய்யப்பட்டது என்று கௌதமுக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Gauthan Menon has decided to name his movie with Dhanush as Enmel Payum Thotta. It is told that the story was intially.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil