Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
3 ஆண்டு முரட்டுத்தனமான காதல்..மஞ்சிமா மோகனை கரம்பிடித்தார் கவுதம் கார்த்திக்...குவியும் வாழ்த்து!
சென்னை : நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இன்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் முறைப்படி காதலை அறிவித்து இன்று இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
சூர்யா- ஜோதிகா, பிரசன்னா- சினேகா, ஆர்யா - சயீஷா, நயன்தாரா - விக்னேஷ் சிவன், ஆதி - நிக்கி கல்ராணி வரிசையில் தற்போது இந்த ஜோடியும் இணைந்துள்ளனர்.
திங்கட்கிழமை திருமணம்.. திடீரென ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்!

காதல் எப்படி வரும்..ஏன் வரும்..
காதல் எப்படி வரும்..ஏன் வரும்.. எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது ஆனால், வரவேண்டிய நேரத்திற்கு கரெக்டா வரும் என்று சொல்வார்கள். அப்படித்தான் கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் காதலில் விழுந்துள்ளனர்.

காதல் தீ
தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் தீ எக்குதப்பாக பற்றிக்கொண்டதால் காதலிக்கத் தொடங்கினர். இவர்களின் காதல் விவகாரம் சினிமா வட்டாரத்தில் அரசல்புரசலாக பேசப்பட்டாலும், காதல் விவகாரம் குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருந்தனர்.

மஞ்சிமா மோகனை கரம் பிடித்தார்
இதையடுத்து, கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, நவம்பர் 28ந் தேதியான இன்று சென்னையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமாவின் திருமணம் எளிமையான முறையில் நடந்துள்ளது.

பட்டு வேஷ்டி சட்டையில்
இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், கவுதம் கார்த்திக் பட்டு வேஷ்டி சட்டை அணிந்தும், மஞ்சிமா அவருக்கு மேட்சிங்காக கோல்டன் நிறத்தில் புடவை அணிந்து இருக்கிறார். இவர்களின் திருமணத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

குவியும் வாழ்த்து
இதேபோல் இயக்குநர்கள் மணிரத்னம், கவுதம் மேனன், நடிகர்கள் ஜீவா, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ஆதி, சிவக்குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை நிக்கி கல்ராணி ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். ரசிகர்களும் இந்த தம்பதிக்கு இணையத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர்.