கவித்துவமாக காதலை சொன்ன கவுதம் கார்த்தி – மஞ்சிமா மோகன்… திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து

சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகினார்.

தொடர்ந்து வை ராஜா வை, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களில் நடித்துள்ள கவுதம் கார்த்திக் தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கவுதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் தாங்கள் காதலிப்பதாக அறிவித்துள்ளனர்.

மூன்றாம் தலைமுறை நாயகன்

மூன்றாம் தலைமுறை நாயகன்

பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்துடன் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் கார்த்திக். அவரது மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய 'கடல்' திரைப்படம் மூலம் ஹீரோவானார். மூன்றாவது தலைமுறை நடிகராக திரைத்துறையில் தடம் பதித்துள்ள கவுதம் கார்த்திக், கடல் படத்தைத் தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சிம்புவுடன் பத்து தல படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரது கேரியரில் இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது

காதலில் விழுந்த கவுதம்

காதலில் விழுந்த கவுதம்

கவுதம் கார்த்திக் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான 'தேவராட்டம்' படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். அப்போதில் இருந்தே இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இருவருமே அதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்தனர். இந்நிலையில், கவுதம் கார்த்தி, மஞ்சிமா மோகன் இருவருமே காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர். இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் ரொம்பவே கவித்துவமாக தங்கள் காதலை தெரிவித்துள்ளனர்.

கவித்துவமான காதல்

கவித்துவமான காதல்

இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள கவுதம் கார்த்திக், நாங்கள் ஒருவரையொருவர் கேலி செய்வதன் மூலம் எங்கள் நட்பை தொடங்கினோம், முதலில் நட்பாக தொடங்கிய இந்த உறவு அதைவிட வலிமையானது. மஞ்சிமா மோகனுடனான நட்பு என்னை நாளுக்கு நாள் வலிமையானதாக மாற்றியது. எப்போதும் என்னை வாழ்க்கையில் முன்னோக்கி பயணிக்க வைத்தது மஞ்சிமா தான். இதுவரை நான் உணராத ஒரு அமைதி இப்போது என் இதயத்தில் இருக்கிறது. அது மஞ்சிமா மோகனால் தான் சாத்தியமானது. இந்த உறவையும் பிணைப்பையும் விவரிக்க 'காதல்' என்ற வார்த்தைக் கூட போதுமானது இல்லை. கடைசி வரை இந்த பந்தத்தை வளர்த்து நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன்! என காதலை தெரிவித்துள்ளார்.

மஞ்சிமா மோகனின் க்யூட் பதில்

மஞ்சிமா மோகனின் க்யூட் பதில்

கவுதம் கார்த்தியின் பதிவுக்கு மஞ்சிமா மோகனும் ரொம்பவே க்யூட்டாக பதிலளித்துள்ளார். அவரது இன்ஸ்டாவில் நான் முழுவதுமாக தொலைந்து போன போது கவுதம் கார்த்திக் தான் காவல் தேவதை போல என் வாழ்வில் வந்ததாகவும், வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர வைத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உன்னை நேசிக்கும் காரணம் என்னவென்றால், நான் யார் என்பதை உணர வைக்கும் அளவிற்கு நீங்கள் என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதுதான் என தனது காதலை கூறியுள்ளார். இருவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்களையும் பார்க்கும் போது விரைவில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் நடைபெறும் என தெரிகிறது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X