For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மஞ்சிமா மோகனுடன் காதலை கன்ஃபார்ம் செய்தாரா கெளதம் கார்த்திக்? இன்ஸ்டா போஸ்ட்டுக்கு என்ன அர்த்தம்?

  |

  சென்னை: தேவராட்டம் படத்தில் ஜோடி போட்டு நடித்த கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ரியல் லைஃப்பிலும் ஜோடி சேரப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

  இருவரும் இணைந்து டேட்டிங் செய்ததாகவும், கூடிய விரைவிலேயே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  இந்நிலையில், அதனை கன்ஃபார்ம் செய்யும் விதமாக நடிகர் கெளதம் கார்த்திக் சமீபத்தில் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட யூகங்களை கிளப்பி வருகிறது.

   இயக்குநராக முதல் சம்பளம் ரூ.3000 மட்டுமே...லோகேஷ் கனகராஜ் சொன்ன சுவாரஸ்ய தகவல் இயக்குநராக முதல் சம்பளம் ரூ.3000 மட்டுமே...லோகேஷ் கனகராஜ் சொன்ன சுவாரஸ்ய தகவல்

  வாரிசு நடிகர்

  வாரிசு நடிகர்

  எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் சிறந்த நடிகராக விளங்கிய நடிகர் முத்துராமனின் மகன் நவரச நாயகன் கார்த்திக் என தமிழ் சினிமாவில் பிரபலமானார். அவரை தொடர்ந்து அவரது மகன் கெளதம் கார்த்திக் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவானார்.

  அடல்ட் பட ஹீரோ

  அடல்ட் பட ஹீரோ

  முதல் படமான கடல் படமே எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தொடர்ந்து கெளதம் கார்த்திக் என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன் என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில் அவருக்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை. இயக்குநர் சந்தோஷ் இயக்கத்தில் வெளியான ஹர ஹர மஹா தேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் நடித்து அடல்ட் ஹீரோ என்கிற பட்டத்தையே பெற்றார் கெளதம் கார்த்திக்.

  மஞ்சிமா மோகனுடன் இணைந்து

  மஞ்சிமா மோகனுடன் இணைந்து

  அப்பா கார்த்தியுடன் இணைந்து நடித்த மிஸ்டர் சந்திரமெளலி, விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என பல படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் மஞ்சிமா மோகனுடன் இணைந்து நடித்த தேவராட்டம் திரைப்படம் கெளதம் கார்த்திக்குக்கு நல்ல வரவேற்பை தந்தது. அதன் பிறகு சமீபத்தில் வெளியான சேரன் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கெளதம் கார்த்திக் நடித்திருந்தார்.

  நடிகையுடன் காதல்

  நடிகையுடன் காதல்

  தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த கெளதம் கார்த்திக்கிற்கும் மஞ்சிமா மோகனுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க்கவுட் ஆன நிலையில், ஆஃப் ஸ்க்ரீனிலும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த ஆண்டுக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தன.

  கன்ஃபார்ம் செய்தாரா

  கன்ஃபார்ம் செய்தாரா

  இந்நிலையில், கடந்த மார்ச் 12ம் தேதி நடிகை மஞ்சிமா மோகன் தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். இதுவரை வேறு எந்த நடிகைக்கும் இப்படியொரு வாழ்த்தை சொல்லாத கெளதம் கார்த்திக் மஞ்சிமா மோகனுக்காக பதிவிட்ட வாழ்த்து மடலில், "ஹேப்பி பர்த்டே மோமோ" என மஞ்சிமா மோகனை செல்லமாக குறிப்பிட்டு இருந்த அவர், "நான் என் வாழ்க்கையிலேயே பெருமைப்படுகிற விஷயம் என ஒன்று இருக்கும் என்றால், அது உன்னைப் போல ஒரு உறுதியான நபர் என் வாழ்வில் இருக்கிறார் என்பதுதான்" என்கிற அர்த்தத்தில் பதிவிட்டு இருப்பது தான் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

  ரசிகர்கள் வாழ்த்து

  ரசிகர்கள் வாழ்த்து

  ரசிகர்கள் இதை வெறும் பிறந்தநாள் வாழ்த்தாக கடந்து போகாமல், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக சேர்ந்து வாழ வேண்டும் என கமெண்ட் பக்கத்தில் வாழ்த்தி இருப்பது தான் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஆனால், இருவரும் இதுதொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Gautham Karthik wishing Manjima Mohan on her birthday in his instagram post recently stirs the love story buzz in Kollywood.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X