»   »  காதல் முறிவிற்குப் பின் மீண்டும் இணையும் கவுதம் கார்த்திக்-பிரியா ஆனந்த்

காதல் முறிவிற்குப் பின் மீண்டும் இணையும் கவுதம் கார்த்திக்-பிரியா ஆனந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வை ராஜா வை படத்தைத் தொடர்ந்து கவுதம் கார்த்திக் -பிரியா ஆனந்த் ஜோடி மீண்டும் ஒருமுறை முத்துராமலிங்கம் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறது.

கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ, வை ராஜா வை போன்ற படங்களும் கடல் படத்தைப் போன்றே பெரியளவில் எடுபடவில்லை.


Gautham Karthik once again team up with Priya Anand

இந்நிலையில் தற்போது முத்துராமலிங்கம் என்ற புதிய படத்தில் நாயகனாக கவுதம் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.


வை ராஜா வை படத்தில் நடிக்கும் போது கவுதம் கார்த்திக்-பிரியா ஆனந்த் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு டேட்டிங் சென்றதாகவும், இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள் என்றும் பல்வேறு வதந்திகள் வெளியாகின.


ஒரு கட்டத்தில் இருவரின் காதலும் முடிவிற்கு வந்ததாகவும் இதனால் பிரியா ஆனந்த் அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்று விட்டதாகவும் கூட கூறினர்.ஆனால் இது குறித்து இருவரும் வெளிப்படையாக எதையும் கூறவில்லை.


இந்நிலையில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லாத பிரியா ஆனந்த் மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து முத்துராமலிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.


இந்த ஜோடி மீண்டும் இணைந்திருப்பது தமிழ் சினிமாவில் பலரின் புருவத்தையும் உயர்த்தச் செய்திருக்கிறது.


கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்துடன் இணைந்து பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.


இளையராஜாவின் 1001 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார்.


இந்தப் படத்தின் மூலம் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவுடன், பஞ்சு அருணாசலம் கைகோர்ப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After Vai Raja Vai Gautham Karthik- Priya Anand once Again Team Up with Muthuramalingam. This Movie Produced by Global Media Works and Directed by Rajadurai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil