எப்போ கல்யாணம் பண்ண போறீங்க?...கெளதம் கார்த்திக் சொன்ன குட் நியூஸ்
சென்னை : நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்தி, கடல் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக தற்போது சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர், நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது.
மஞ்சிமா மோகனின் பிறந்தநாள் அன்று அவருடனான ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்யும் வகையில் வாழ்த்து பதிவிட்டிருந்தார் கெளதம் கார்த்திக். ஆனால் இருவருமே வெளிப்படையாக தங்களின் உறவு பற்றி எந்த தகவலையும் உறுதி செய்யவில்லை.

மஞ்சிமாவுடன் டேட்டிங்
2019 ம் ஆண்டு ரிலீசான தேவராட்டம் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது மஞ்சிமா மோகன் மற்றும் கெளதம் கார்த்திக் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் டேட்டிங் சென்று வந்ததாகவும் சொல்லப்பட்டது. பிறகு இருவரும் தங்களின் பெற்றோர்களிடம் சொல்லி, அவர்களின் சம்மதத்தையும் வாங்கி விட்டதாகவும் சொல்லப்பட்டது.

அப்போ லவ் உண்மையில்லையா
இவர்களின் திருமணம் பற்றிய அறிவிப்பு வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த சமயத்தில், வெறும் பரபரப்பிற்காக கெளதம் கார்த்திக் தான் இவ்வாறு சொல்லி உள்ளார். தனக்கு அப்படி எந்த எண்ணமும் கிடையாது. இதுவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்பது போல் மஞ்சிமா தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

கல்யாணம் எப்போ
இந்த சமயத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் கெளதம். அப்போது ரசிகர் ஒருவர், உங்களுக்கு எப்போ திருமணம் என கேட்டார். இதற்கு சற்று யோசித்து, மிக விரைவில்...என நம்பலாம் என சிரித்தபடி பதிலளித்தார் கெளதம். இதனால் நிஜமாகவே அவருக்கு பெண் பார்த்து விட்டார்களா அல்லது நக்கலுக்காக இப்படி சந்தேகமாக சொல்கிறாரா என புரியாமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கெளதமின் எதிரி இவர் தானா
மற்றொரு ரசிகர், உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என கேட்டதற்கு, நான் பலமுறை சொல்லி விட்டேன். இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன், தோசை என்றார். உங்களின் மோசமான எதிரி யார் என கேட்டதற்கு, நான் தான். என்னுடைய நெகடிவ் எண்ணங்கள், சோம்பேறி தனம், நம்பிக்கையின்மை இது தான் என்னுடைய எதிரிகள். இதை வெற்றி கொள்வது தான் என்னுடைய உண்மையான வெற்றி என்றார்.


Click it and Unblock the Notifications











