»   »  விண்ணைத்தாண்டி வருவாயா, மாட்டாயா?.. மீண்டும் த்ரிஷாவிடம் கேட்கப் போகும் சிம்பு

விண்ணைத்தாண்டி வருவாயா, மாட்டாயா?.. மீண்டும் த்ரிஷாவிடம் கேட்கப் போகும் சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2010 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, படத்தின் 2 ம் பாகத்தை விரைவில் தொடங்க இருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிம்பு - த்ரிஷா நடிப்பில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா, தற்போது அதன் 2 ம் பாகத்தை கையில் எடுக்கவிருக்கிறார் இயக்குநர் கவுதம் மேனன்.

தற்போது சிம்புவை வைத்து அச்சம் என்பது மடமையடா படத்தை எடுத்து வரும் கவுதம் மேனன், மீண்டும் சிம்புவை வைத்தே விண்ணைத்தாண்டி வருவாயா 2 ம் பாகத்தை ஆரம்பிக்க இருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா

2010 ம் ஆண்டு வெளிவந்து இன்றளவும் காதலர்களால் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ் நடித்து வெளிவந்த ஆண்டில் மாபெரும் ஹிட்டடித்தது.

சிம்புவின் திரையுலக வாழ்க்கை

சிம்புவின் திரையுலக வாழ்க்கை

சிம்புவின் திரையுலக வாழ்க்கையை விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு முன், படத்திற்குப் பின் என்று இரண்டாக பிரித்துப் பார்க்கக் கூடிய அளவிற்கு இந்தப் படத்தின் மூலம் சிம்புவின் திரை வாழ்க்கை மாறியது. குறிப்பாக சிம்புவின் மேல் அதுவரை இருந்து வந்த பெண்களின் அபிப்பிராயம் இந்த படத்திற்குப் பின்பு மாறி நிறைய பெண் ரசிகைகளை அவருக்கு அளித்தது.

மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்

மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்

தாமரையின் வரிகளில் மன்னிப்பாயா, அன்பில் அவன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பாடல்கள் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறிப் போனது. தாமரையின் வரிகளும், ஏ.ஆர்.ரகுமானின் இசையும் படத்திற்கு ஒரு புதிய நிறத்தையே கொடுத்தன. 20 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற இத்திரைப்படம், அதிகமான விருதுகளை இசைக்காவும் பாடல்களுக்காகவும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

படத்தின் வெற்றிக்குப் பின்பே படத்தின் 2 ம் பாகத்தை ஆரம்பிக்க இருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் குறிப்பிட்டு இருந்தார். இடையில் சில படங்களை முடித்து விட்டு விண்ணைத்தாண்டி வருவாயா 2 ம் பாகத்தை தொடங்குவேன் என்று கூறிய அவர், ஏற்கனவே சொன்னபடி தற்போது படத்தின் வேலைகளை தொடங்க உள்ளார்.

தொடரும் சிம்பு - த்ரிஷா

தொடரும் சிம்பு - த்ரிஷா

2 ம் பாகத்திலும் சிம்பு -த்ரிஷாவை வைத்தே இயக்கவிருக்கிறார் கவுதம் மேனன், முதல் பாகத்தில் என் அட்ரஸ் எப்படிக் கண்டுபிடிச்சே என்று த்ரிஷா சிம்புவிடம் கேட்க அதற்கு சிம்பு அதை அப்புறம் சொல்கிறேன் என்று கூறியிருப்பார். அதற்கான விடை மற்றும் சிம்புவின் திருமணம் போன்றவை இந்தப் படத்தில் இடம்பெறலாம். இவர்கள் இருவருடன் இணைந்து மேலும் சில நடிகர், நடிகைகளும் படத்தில் இடம்பெறுவார்கள் என்று கூறுகின்றனர்.

இந்த முறையாவது விண்ணைத்தாண்டி வருவாரா த்ரிஷா?

English summary
Director Gautham Menon at a recent press meet has confirmed that he is planning on a sequel to his 2010 super hit movie Vinnaithaandi Varuvaayaa (VTV), starring Simbu and Trisha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil