»   »  நடிகராகிறார் கவுதம் மேனன்... பேஸ்புக்கில் அறிவித்த இயக்குநர்

நடிகராகிறார் கவுதம் மேனன்... பேஸ்புக்கில் அறிவித்த இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல இயக்குநர் கவுதம் மேனன் அடுத்ததாக ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஆனால் கவுதம் மேனன் நடிக்கவிருப்பது இங்கல்ல மலையாளப் படவுலகில்.

மலையாளத்தில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான வினித் சீனிவாசன் இயக்கும் அடுத்தப் படத்தில் கவுதம் மேனன் நடிக்கிறார்.

Gautham Menon Debut in Malayalam

மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் மற்றும் தட்டத்தின் மறயத்து போன்ற வெற்றிப் படங்களை நிவின் பாலியுடன் சேர்ந்து கொடுத்த இயக்குநர், அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம்.

இப்படத்தில் நிவின்பாலி மற்றும் கவுதம் மேனனுடன் இணைந்து ,சாய்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள்.

Jacobinte Swargarajyam!! our next :-)

Posted by Vineeth Sreenivasan - Official on Thursday, October 29, 2015

மலையாளத்தில் கெளதம் நடிக்கவிருக்கும் முதல் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான அறிவிப்பை வினித் தன்னுடைய பேஸ்புக்கில் எழுதி புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ள வினித் - நிவின் பாலி கூட்டணியில் கவுதம் மேனன் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.

அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Director Gautham Menon will debut as an actor in the upcoming Malayalam movie Jacobinte Swargarajyam.Nivin Pauly, Vineeth Sreenivasan to team up with Gautham Menon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil