TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
Varmaa - மீண்டும் வர்மா.. ‘காதல்’ ஸ்பெஷலிஸ்ட் கௌதம் மேனன் இயக்குகிறார்?
சென்னை: மீண்டும் படமாக்கப்பட உள்ள வர்மா படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அது ஜுன் மாதம் திரைக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென அப்படம் வேறு இயக்குநர் மூலம் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படமாக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
மாற்றங்கள்:
இது தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் இதற்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாலா விளக்கம்:
இந்த விவகாரம் பற்றி பாலாவும் தன் தரப்பு விளக்கத்தை அறிக்கை வாயிலாக தெரியப்படுத்தினார். இந்நிலையில், மீண்டும் வர்மா படத்தை வேறு எந்த இயக்குநரை வைத்து மீண்டும் படமாக்குவது என்ற வேலையில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கௌதம் இயக்கம்?
இதில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் பெயரும் அடிபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு அடுத்த இடங்களில் பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், டேவிட், சோலோ படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் ஆகியோரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காதல் ஸ்பெஷலிஸ்ட்:
கௌதம் மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா என இளைஞர்களைக் கவரும் வகையில் காதல் படங்கள் கொடுப்பதில் வல்லவர். ஆக்சன் படமாகவே இருந்தாலும், அதில் சைடு கேப்பில் காதல், ரொமான்ஸ் என காட்சிகள் வைக்க மறக்கமாட்டார். இதற்கு காக்க காக்க, என்னை அறிந்தால் போன்ற படங்களே உதாரணம்.
துருவ நட்சத்திரம்:
எனவே, அவரது இயக்கத்தில் வர்மா படத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பு நினைப்பதாகத் தெரிகிறது. தற்போது கௌதம் இயக்கத்தில் விக்ரம் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தள்ளிப் போகும் ரிலீஸ்:
ஆனால், வேறு எந்த இயக்குநரை வைத்து வர்மா படத்தை மீண்டும் இயக்கினாலும், தயாரிப்பு தரப்பு திட்டமிட்டபடி படம் ஜுனில் வெளி வருவது மிகவும் கடினமான விஷயம் என்கிறார்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள். எனவே ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.