»   »  கௌதம் மேனன் மிரட்டும் 'கோலிசோடா 2' ட்ரெய்லர்!

கௌதம் மேனன் மிரட்டும் 'கோலிசோடா 2' ட்ரெய்லர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'கோலிசோடா 2' - கௌதம் மேனன்

சென்னை : 'அழகாய் இருக்கிறாய் பயமா இருக்கிறாய்' படத்தின் மூலம் இயக்குநரான விஜய் மில்டன் 'கோலி சோடா' படம் ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து, விஜய் மில்டன் 'கோலி சோடா 2' படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் மில்டன் இயக்கியுள்ள 'கோலி சோடா 2' படத்தின் ட்ரெய்லரை, இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டார். இந்த படத்தை, விஜய் மில்டனின் ரஃப் நோட் தயாரித்திருக்கிறது. விஜய் மில்டன் 'ஆட்டோகிராஃப்', 'சாமுராய்', 'காதல்' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்.

Gautham menon in golisoda 2 trailer

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கோலி சோடா 2'. ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற 'கோலி சோடா' படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்களைப் பயன்படுத்தாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார் விஜய் மில்டன்.

சமுத்திரக்கனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லரில் கௌதம் மேனனின் வாய்ஸ் இடம்பெற்று ரசிகர்களை மிரட்டியிருக்கிறது. இந்தப் படத்தில் செம லுக்கில் வருகிறார் கௌதம் மேனன்.

English summary
Vijay Milton's 'goli Soda' gave a good hit. Following this, Vijay Milton is directing 'goli Soda 2'. Director Gautham Menon released the trailer of 'goli Soda 2'. Gautham Vasudev Menon plays an important character in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil