தளபதி 67க்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்த சிம்பு பட இயக்குநர்… எல்லாம் விஜய்க்காக மட்டும் தானாம்!
சென்னை: விஜய் தற்போது நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' ஷூட்டிங்கில் விஜய் கலந்துகொள்ள உள்ளார்.
'தளபதி 67' படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வாரிசு அப்டேட்
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் நடைபெற்று வருகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் வாரிசு படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். விஜய்யின் போஸ்டர்களை வெளியிட்டுள்ள வாரிசு படக்குழு, விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யும் என சொல்லப்படுகிறது. தீபாவளிக்கு வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துள்ளனர்.

தளபதி 67க்கு ரெடியான விஜய்
வாரிசு படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ்ஜுடன் மீண்டும் இணைகிறார் விஜய். ஏற்கனவே மாஸ்டர் மூலம் ப்ளாக் பஸ்டர் கொடுத்த இந்தக் கூட்டணி, தளபதி 67 படத்திலும் தரமான சம்பவம் செய்யும் என சொல்லப்படுகிறது. விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும், முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் இந்தப் படம் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'தளபதி 67' படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் லோகேஷ் கனகராஜ் அன்ட் டீம் ரொம்பவே பிஸியாக உள்ளனர். இந்தப் படத்தை விஜய்க்கு மெகா ஹிட் கொடுக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துவிட்டாராம்.

வில்லனாக இணைந்த இயக்குநர்
தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாக 6 முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், பாலிவுட்டில் இருந்து சஞ்சய் தத், மலையாளத்தில் இருந்து பிருத்விராஜ், தமிழில் மன்சூர் அலிகான், இயக்குநர் கெளதம் மேனன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதில், இயக்குநர் கெளதம் மேனன் கமிட் ஆகியுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சமீபத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தை சூப்பர் ஹிட்டாக்கி மாஸ் காட்டியிருந்தார்.

மொத்தமாக கால்ஷீட் கொடுத்த கெளதம் மேனன்
கெளதம் மேனன் இப்போது இயக்குநராக வலம் வருவதை விட, வில்லன் நடிகராக தான் கெத்து காட்டி வருகிறார். வில்லன், போலீஸ் கேரக்டர், கெஸ்ட் ரோல், தாதா என வெரைட்டியாக நடித்து வரும் கெளதம் மேனன் தளபதி 67ல் இணைவது அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. விஜய் - கெளதம் மேனன் கூட்டணியில் 'யோஹன் - அத்தியாயம் ஒன்று' என்ற படம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் அந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. விஜயை இயக்க நினைத்த கெளதம் மேனன், இப்போது அவருக்கு வில்லனாக நடிக்க 47 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். கெளதம் மேனன் இப்படி மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளது விஜய்க்காக தான் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











