»   »  "குப்பை மாதிரி நடத்துனீங்க.." - கௌதம் மேனனை விமர்சித்த இயக்குநரால் பரபரப்பு!

"குப்பை மாதிரி நடத்துனீங்க.." - கௌதம் மேனனை விமர்சித்த இயக்குநரால் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மிக இளம் வயதில் நம்பிக்கைக்குரிய இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தவர் கார்த்திக் நரேன். இவரது முதல் படமான 'துருவங்கள் 16' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார்.

இந்நிலையில், கௌதம் மேனனை விமர்சிக்கும் விதமாக ட்வீட் போட்டிருக்கிறார் கார்த்திக் நரேன். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

'துருவங்கள் 16' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். தற்போது அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடிப்பில் 'நரகாசூரன்' படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக, 'நாடக மேடை' என்னும் படத்தை இயக்க இருக்கிறார்.

ட்வீட்டால் பரபரப்பு

இந்நிலையில், கார்த்திக் நரேன் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. "சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள்.

தவறான நம்பிக்கை

தவறான நம்பிக்கை

அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் காண நேரிடும்" என ட்வீட் செய்துள்ளார் கார்த்திக் நரேன். இந்த ட்வீட் செய்தபோது அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகாமல் இருந்தது.

குப்பையைப் போல நடத்தினீர்கள்

கௌதம் மேனன் ஒரு வீடியோவை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதைக் குறிப்பிட்டு "பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்யவேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்" என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

முற்றும் மோதல்

முற்றும் மோதல்

இயக்குநர் கார்த்திக் நரேனின் ட்வீட், சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கௌதம் மேனன் பின்னர் எதுவும் தெரிவிக்கவில்லை. 'நரகாசூரன்' படம் வெளிவருமா என ரசிகர்கள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.

English summary
Karthik Naren's first film 'D 16' got good response. Karthik Naren is currently directing the movie 'Naragasooran'. This film is produced by Gautham Menon. In this case, Karthik Naren has tweeted to comment on Gautham Menon. It has created a stir among the filmmakers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X