»   »  4 ஹீரோக்களுடன் புதிய படத்தைத் தொடங்கும் கவுதம் மேனன்?

4 ஹீரோக்களுடன் புதிய படத்தைத் தொடங்கும் கவுதம் மேனன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதம் மேனன் அடுத்ததாக 4 ஹீரோக்கள் நடிக்கும் படத்தை தொடங்கப் போவதாக கூறப்படுகிறது.

'அச்சம் என்பது மடமையடா' படத்துக்குப் பின் தனுஷ்-மேகா ஆகாஷை வைத்து 'என்னை நோக்கி பாயும் தோட்டா'வை கவுதம் மேனன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் கவுதம் மேனன் அடுத்ததாக பிருத்விராஜ்(மலையாளம்), சாய் தரண்தேஜ்(தெலுங்கு), புனித் ராஜ்குமார்(கன்னடம்) ஆகியோரை வைத்து ஒரு படத்தை எடுக்கப் போகிறாராம்.

Gautham Menon next Direct Multilingual Film

தமிழில் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். முன்பு சிம்புவை வைத்து இப்படத்தை கவுதம் எடுப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் எபெக்டால் சிம்புவிற்குப் பதில் வேறு ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்க, கவுதம் மேனன் முயற்சித்து வருகிறாராம்.

ஹீரோயினாக அனுஷ்கா, தமன்னா இருவரையும் ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். இன்னும் ஒரு ஹீரோயின் மற்றும் தமிழ் ஹீரோ மட்டும்தான் பாக்கி என்கிறார்கள்.

படத்திற்கு 'ஒன்றாக' என்று தலைப்பு வைத்திருப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் படத்தை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் ஹீரோ தேர்வு முடிந்தவுடன் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said Gautham Menon next Direct a Multilingual Film. The Official Announcement will be expected soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil