»   »  பிருத்விராஜ், அனுஷ்கா, தமன்னாவுடன் பிரமாண்ட 'கூட்டணி' அமைத்த கவுதம் மேனன்!

பிருத்விராஜ், அனுஷ்கா, தமன்னாவுடன் பிரமாண்ட 'கூட்டணி' அமைத்த கவுதம் மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா, தமன்னா, பிருத்விராஜ் நடிக்கும் புதிய படம் டிசம்பரில் துவங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவுதம் மேனன் தற்போது தனுஷ்-மேகா ஆகாஷை வைத்து 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

Gautham Menon Next Movie Start December

இதனைத் தொடர்ந்து 4 ஹீரோக்களுடன் தனது புதிய படத்தை அவர் தொடங்கவிருக்கிறார். 4 ஹீரோக்களில் பிருத்விராஜ், சாய் தரண் தேஜ், புனித் ராஜ்குமார் என 3 ஹீரோக்களை தேர்வு செய்திருக்கிறார்.

ஹீரோயின்களாக தமன்னா,அனுஷ்காவைத் தேர்வு செய்திருக்கும் கவுதம் மேனன் 3 வது ஹீரோயினையும் 4 வது ஹீரோவையும் தற்போது மும்முரமாகத் தேடி வருகிறார்.

Gautham Menon Next Movie Start December

இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் அமெரிக்கா நாட்டில் நடத்திட அவர் முடிவு செய்திருக்கிறாராம்.

கவுதம் மேனனின் படங்களில் ஹீரோ, ஹீரோயின் அமெரிக்கா செல்வது போன்ற காட்சிகள், அமெரிக்க பின்னணியிலான டூயட் பாடல்கள் கண்டிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஹீரோக்கள் சேர்ந்து ஒரு டிரிப் செல்லும்போது அங்கே அவர்கள் சந்திக்கும் விஷயங்களே படத்தின் கதையாம். 'ஒன்றாக' என்று படத்திற்கு கவுதம் மேனன் தலைப்பு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

English summary
Sources said Gautham Menon Multi Starrer Project may be Start on December.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil