»   »  ஜெயம் ரவி - அனிருத் - தனுஷ்.. பிரமாண்ட கூட்டணி அமைக்கும் கவுதம் மேனன்

ஜெயம் ரவி - அனிருத் - தனுஷ்.. பிரமாண்ட கூட்டணி அமைக்கும் கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டின் புதிய பிரமாண்ட கூட்டணியாக உருவாகிறது கவுதம் மேனன், ஜெயம் ரவி, தனுஷ், அனிருத்தின் நால்வர் கூட்டணி.

அச்சம் என்பது மடைமையடா படத்தைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் படங்களைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் ஒரே நேரத்தில் ஜெயம் ரவி மற்றும் தனுஷை அவர் இயக்கவிருப்பதாக தகவல்கள் அடிபடுகின்றன.

கவுதம் மேனன்

கவுதம் மேனன்

என்னை அறிந்தால் படத்திற்குப் பின்னர் சிம்புவை வைத்து அச்சம் என்பது மடைமையடா படத்தை எடுத்து வருகிறார் கவுதம் மேனன். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட்டுக்குப் பின் இந்தக் கூட்டணி இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மதன் - கவுதம் மேனன்

மதன் - கவுதம் மேனன்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான மதன், கவுதம் மேனனின் நீண்ட நாள் நண்பராக இருந்தவர். மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தயாரிப்பாளர்களில் மதனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இடையில் ஏற்பட்ட பிரிவு காரணமாக கவுதம் மேனனை விட்டு தனியே பிரிந்து படங்களை தயாரித்து வந்தார் மதன்.

இணைந்த நட்பு

இணைந்த நட்பு

நீண்ட பிரிவிற்குப் பின்னர் தற்போது மதன்-கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. மதன் தயாரிப்பில் 2 படங்களை கவுதம் மேனன் இயக்கவிருப்பதாக கூறுகின்றனர். ஒரு படத்தில் ஜெயம் ரவியையும் மற்றொரு படத்தில் தனுஷையும் இயக்க கவுதம் மேனன் முடிவு செய்திருக்கிறாராம்.

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

சூர்யா- கவுதம் மேனன் கூட்டணியால் கைவிடப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தையே மீண்டும் எடுப்பது கவுதமின் திட்டமாம். நாயகனாக ஜெயம் ரவியும், இசையமைப்பாளராக அனிருத்தும் துருவ நட்சத்திரத்தின் மூலம் இணைகின்றனர்.

தனுஷ் - ஹாரிஸ் ஜெயராஜ்

தனுஷ் - ஹாரிஸ் ஜெயராஜ்

கவுதம் மேனனின் மற்றொரு படத்தில் நாயகனாக தனுஷ் நடிக்க, இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனராம். இந்தப் பிரமாண்ட கூட்டணி குறித்த முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Director Gautham Menon Next Team Up with Jayam Ravi and Dhanush. The Official Announcement will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil