»   »  என்னை அப்படி செய்ய வைத்த மாதவனை ஒருநாளும் மன்னிக்கவே மாட்டேன்: கவுதம் மேனன்

என்னை அப்படி செய்ய வைத்த மாதவனை ஒருநாளும் மன்னிக்கவே மாட்டேன்: கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னத்திடம் தன்னை கதை சொல்ல வைத்த மாதவனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

மின்னலே படத்தில் நடிக்க கவுதம் மேனன் மாதவனை தொடர்பு கொண்டபோது அவரோ மணிரத்னத்திடம் கதை சொல்லுமாறு கூறிவிட்டார். மணிக்கு கவுதம் கூறிய கதை பிடிக்கவில்லை என்பது தனிக் கதை.

இந்நிலையில் இது குறித்து கவுதம் பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

மாதவன்

மாதவன்

மின்னலே படத்தில் நடிக்குமாறு மாதவனை அணுகினேன். அவர் என்னவென்றால் இயக்குனர் மணிரத்னம் சாரிடம் கதையை கூறுமாறு தெரிவித்தார்.

மன்னிக்க மாட்டேன்

மன்னிக்க மாட்டேன்

என் இன்ஸ்பிரேஷனான மணி சாரிடம் என்னை கதை சொல்ல வைத்ததற்காக மாதவனை மன்னிக்கவே முடியாது. நான் மணி சாரை பார்த்து பயந்துவிட்டேன். அவரிடம் சப்பையாக கதை சொல்லப் போகிறோமே என்று நினைத்தேன்.

வேண்டாம் மேடி

வேண்டாம் மேடி

மணி சார்ட்ட வேண்டாம் மேடி என்று கூறினேன். அலைபாயுதே படத்திற்கு பிறகு கரெக்டான படங்கள் பண்ணு என்று அவர் என்னிடம் தெரிவித்துள்ளார் அதனால் நீங்கள் அவரிடமே கதை சொல்லுங்கள் என கூறி மணி சாரிடம் அழைத்துச் சென்றார்.

இம்பிரஸ்

இம்பிரஸ்

மணி சாரிடம் கதை சொல்ல வேண்டும். அவர் என் கதையை ஒரு மணிநேரம் கேட்க வேண்டும். அவரை இம்பிரஸ் செய்ய வேண்டும் என்ற பதட்டம் இருந்தது. கதையை கேட்ட பிறகு அவருக்கு அது பிடிக்கவில்லை. இருப்பினும் மேடி நடித்தார்.

English summary
Director Gautham Menon said that he will never ever forgive Madhavan for making him to narrate the story of Minnale to director Maniratnam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos