»   »  சசிகுமார் பட டீசர் ரிலீஸ்... வெளியிடும் கௌதம் மேனன்!

சசிகுமார் பட டீசர் ரிலீஸ்... வெளியிடும் கௌதம் மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சசிகுமார் படத்தை வெளியிடும் கௌதம் மேனன்!- வீடியோ

சென்னை: சசிகுமார், நந்திதா நடிப்பில் மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அசுரவதம்'.

'கொடிவீரன்' படத்துக்குப் பின் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அசுரவதம்'. சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. டீசரை இயக்குநர் கௌதம் மேனன் ட்விட்டரில் வெளியிட உள்ளார்.

இயக்குநர்

இயக்குநர்

'அசுரவதம்' திரைப்படத்தை எம்.மருதுபாண்டியன் எழுதி இயக்கியுள்ளார். இவர் இதற்குமுன் பாபி சிம்ஹா நடிப்பில் உருவான 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தை இயக்கியவர்.

படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில், வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

கௌதம் மேனன் வெளியிடுகிறார்

இந்நிலையில், 'அசுரவதம்' படத்தின் டீசரை இன்று மாலை 7 மணிக்கு கௌதம் மேனன் ட்விட்டரில் வெளியிட இருக்கிறார். இந்தத் தகவலை சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் ரிலீஸ்

ஏப்ரல் ரிலீஸ்

நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த நிறுவனம் அல்லாத வேறொரு பேனரில் சசிகுமார் நடிக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13ல் இப்படம் ரிலீஸாக உள்ளது.

English summary
Sasikumar's 'Asuravadham' teaser will be released by Gautham vasudev menon today evening.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil