»   »  வரமுடியாட்டி சொல்லுங்கள், படத்தை டிராப் செய்துவிடுகிறேன்: சிம்புவிடம் தெரிவித்த கௌதம்

வரமுடியாட்டி சொல்லுங்கள், படத்தை டிராப் செய்துவிடுகிறேன்: சிம்புவிடம் தெரிவித்த கௌதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் கௌதம் மேனன் தனது படத்தில் நடிக்க சிம்புவுக்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம்.

கௌதம் மேனன் சிம்பு, இந்தி நடிகை பல்லவி சுபாஷை வைத்து ஒரு படத்தை துவங்கினார். படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் அது அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கௌதம் அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை எடுத்து ரிலீஸ் செய்தார்.

இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட சிம்புவின் படத்தை மீண்டும் துவங்குகிறார் கௌதம்.

பல்லவி

பல்லவி

பல்லவி சுபாஷின் கால்ஷீட் கிடைக்காவிட்டால் அவரை நீக்கிவிட்டு புதிய ஹீரோயினை நடிக்க வைக்க கௌதம் முடிவு செய்துள்ளார்.

21ம் தேதி

21ம் தேதி

வரும் 21ம் தேதி அதாவது நாளை படப்பிடிப்பை துவங்குவதற்கான ஏற்பாடுகளை கௌதம் மேனன் செய்து வருகிறார்.

2 மாதம்

2 மாதம்

படப்பிடிப்பை இரண்டு மாதங்களில் முடித்துவிட்டு படத்தை வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் கௌதம்.

சிம்பு

சிம்பு

ஒழுங்காக கால்ஷீட் கொடுத்தபடி வந்து நடிக்க வேண்டும். முடியாது என்றால் சொல்லுங்கள் படத்தை இப்பொழுதே டிராப் செய்துவிடுகிறேன் என்று கௌதம் சிம்புவிடம் தெரிவித்துள்ளாராம்.

சட்டென்று மாறுது வானிலை

சட்டென்று மாறுது வானிலை

சிம்புவை வைத்து தான் இயக்கும் படத்திற்கு சட்டென்று மாறுது வானிலை என்று பெயர் வைக்க நினைத்தார் கௌதம். ஆனால் அந்த பெயரை வேறொருவர் பதிவு செய்திருப்பதால் தனது படத்திற்கு வேறு பெயரை தேடிக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன்.

English summary
Gautham Menon has asked Simbu to stick to one condition of him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil