»   »  துருக்கியில் துருவ நட்சத்திரம் படக்குழுவுடன் சிக்கியுள்ள கௌதம் மேனன்.. உதவ கோரிக்கை!

துருக்கியில் துருவ நட்சத்திரம் படக்குழுவுடன் சிக்கியுள்ள கௌதம் மேனன்.. உதவ கோரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

பல்கேரியா மற்றும் சென்னையில் நடந்த படப்பிடிப்புகளைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பை துருக்கியில் நடத்துகிறது 'துருவ நட்சத்திரம்' படக்குழு.

இதற்காக, விக்ரம், பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் சூட்டிங்கிற்காக தற்போது துருக்கி சென்றுள்ளனர்.

துருக்கி எல்லையில் :

படக்குழுவினருடன் துருக்கி எல்லையில், எல்லை பாதுகாப்பு அதிகாரிகளையும் தொடர்பு கொண்ட உதவி கேட்க முடியாமல் 24 மணி நேரத்திற்கும் மேலாக படக்குழுவினருடன் கவுதம் தவித்துள்ளார்.

உதவி கேட்க வழியில்லை :

படக்குழுவினருடன் கேமரா உள்ளிட்ட ஷூட்டிங்குக்குத் தேவையான உபகரணங்களுடன் ஜியார்ஜியாவில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது துருக்கி எல்லையில் சிக்கிக் கொண்டனர்.

ட்விட்டரில் கோரிக்கை :

மிக அழகான துருக்கி நாட்டில் படப்பிடிப்பு நடத்த வந்த தாங்கள் எல்லையில் சிக்கிக் கொண்டு இருப்பதாகவும், இதனை படிப்பவர்கள் யாராவது உதவி செய்யுமாறும் கௌதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹெல்ப் ப்ளீஸ் :

ஹெல்ப் ப்ளீஸ் :

கேமரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்களுடன் சிக்கிக் கொண்டிருக்கும் தனக்கும், தனது படக்குழுவினருக்கும் உதவுமாறு ட்விட்டரில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது ரசிகர்கள் பலர், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் மென்ஷன் செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

துருவ நட்சத்திரம் :

துருவ நட்சத்திரம் :

விக்ரம், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை கெளதம் மேனின் 'ஒன்றாக என்டர்டெயின்மண்ட்' மற்றும் மதனின் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்' நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

English summary
Vikram starring 'Dhruva Natchathiram' is shooting in Turkey. Gautham menon's crew were trapped in the Turkey border.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X