»   »  துருக்கி எல்லையில் தவியாய் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்தது

துருக்கி எல்லையில் தவியாய் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்தான்புல்: துருக்கி எல்லையில் 24 மணிநேரமாக சிக்கித் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்துள்ளது.

விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். பல்கேரியா, சென்னையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு துருக்கி சென்றது படக்குழு.

துருக்கி எல்லையில் படக்குழுவுக்கு பிரச்சனை ஏற்பட்டது.

ஆவணங்கள்

ஆவணங்கள்

சரியான ஆவணங்கள் வைத்திருந்தும் துருக்கி எல்லையில் உள்ள அதிகாரிகள் துருவ நட்சத்திரம் படக்குழுவை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் எல்லையிலேயே படக்குழு 24 மணிநேரத்திற்கு மேலாக நின்றுள்ளது.

ட்விட்டர்

ட்விட்டர்

படக்குழுவின் கஷ்டத்தை பார்த்த கவுதம் மேனன் ட்விட்டர் மூலம் உதவி கேட்டார். அதிர் எதிர்பார்த்தது போன்று தேவையான உதவி கிடைத்து பிரச்சனை தீர்ந்துள்ளது.

கவுதம்

என் படக்குழு நாட்டிற்குள் வந்துவிட்டது. பிரச்சனை தீர்ந்துவிட்டது. இங்குள்ளவர்கள் உதவி செய்தார்கள். கால்கள், ரீட்வீட்டுகள், ஆதரவுக்கு நன்றி. துருக்கியில் உள்ளோம் என்று கவுதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சுஹாசினி

சுஹாசினி

கடந்த மாதம் இத்தாலி சென்ற இயக்குனர் மணிரத்னத்தின் மகனின் உடைமைகள் திருடு போனது. இதையடுத்து சுஹாசினி உதவி கேட்டு ட்வீட்டினார். ட்வீட்டை பார்த்துவிட்டு அவரின் மகனுக்கு உதவி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhruva Natchathiram's Turkey issue is solved. Director Gautham Menon tweeted that, 'My crew is coming in.It's all sorted now.Solid support from the locals here.Thanking everyone for the calls&retweets&support!TURKEY it is!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X