»   »  வெங்கட் பிரபுவின் புதிய படம்... தயாரிப்பாளராக மாறிய கவுதம் மேனன்

வெங்கட் பிரபுவின் புதிய படம்... தயாரிப்பாளராக மாறிய கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் கவுதம் மேனன் மற்றொரு இயக்குனரான வெங்கட் பிரபுவுடன் இணைந்து அடுத்த படத்தைத் தயாரிக்கவிருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் மாசு என்கிற மாசிலாமணி. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியது.

இப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு எந்த படமும் இயக்காமல் நீண்ட நாட்களாக இருந்தார். இந்நிலையில் நேற்று தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டு இருக்கிறார்.

Gautham Menon Team Up with Venkat Prabhu

அதாவது வெங்கட் பிரபுவின் அடுத்த படம் அவருடைய சொந்தத் தயாரிப்பாக வெளிவர இருக்கிறது. பிளாக் டிக்கெட் கம்பெனி என்ற பெயரில் புதிய பட நிறுவனத்தை வெங்கட் பிரபு ஆரம்பித்திருக்கிறார்.

வெங்கட் பிரபுவின் நிறுவனமும், கௌதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கவிருக்கின்றனர்.

இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபுவே இயக்கவுள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பட்டியலை விரைவில் இருவரும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சென்னை 28 படக்குழுவினருடன் இணைந்து ஒரு புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

English summary
Director Gautham Menon Join Hands with Venkat Prabhu for His Next Movie. The Official Announcement of this Film will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil