»   »  சிம்பு, அல்லு அர்ஜுன், பகத் மற்றும் புனித்....மல்டி ஸ்டார்களுடன் கைகோர்க்கும் கவுதம் மேனன்

சிம்பு, அல்லு அர்ஜுன், பகத் மற்றும் புனித்....மல்டி ஸ்டார்களுடன் கைகோர்க்கும் கவுதம் மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு, அல்லு அர்ஜுன், பகத் பாசில் மற்றும் புனித் ராஜ்குமாருடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்குநர் கவுதம் மேனன் எடுக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகிருக்கின்றன.

சிம்புவை வைத்து தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் கவுதம் மேனன் இந்தப் படத்தை முடித்து விட்டு புதிய படத்தை கையில் எடுக்கவிருக்கிறாராம்.

மேலும் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் சிம்புவை வைத்து தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் கவுதம் மேனன். சிம்புவுடன் இணைந்து ராணா டகுபதி மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். தாமரையின் பாடல் வரிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.இந்தப் படத்தை தெலுங்கில் நாக சைதன்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய மொழிகளில்

தென்னிந்திய மொழிகளில்

அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பின்னர் கவுதம் மேனன் தான் இயக்கப் போகும் புதிய படத்தை தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் எடுக்கவிருக்கிறார். 4 நடிகர்களில் ஒருவராக தமிழில் சிம்புவை தேர்வு செய்திருக்கிறார் கவுதம் மேனன்.

தெலுங்கு மற்றும் மலையாளம்

தெலுங்கு மற்றும் மலையாளம்

தெலுங்கு மொழியில் அல்லு அர்ஜுனையும் மலையாளத்தில் பகத் பாசிலையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றனவாம். மேலும் இந்த மொழிகளில் படத்திற்கான தயாரிப்பாளர்களையும் கவுதம் மேனன் தேடி வருவதாகக் கூறுகின்றனர்.

கன்னட மொழியில்

கன்னட மொழியில்

பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட மொழியில் நடிக்க நடிக்க சம்மதித்துள்ளார் படத்தில் நடிப்பது தவிர கன்னட மொழியில் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பையும் புனித் ஏற்றுக் கொண்டிருக்கிறார். 2 வருடங்களுக்கு முன்பே புனித் ராஜ்குமார் கவுதம் இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொல்லி விட்டாராம் எனினும் சூழ்நிலைகள் சாதகமாக அமையாததால் தற்பொழுது தான் அது சாத்தியமாகியிருக்கிறது.

தயாரிப்பு

தயாரிப்பு

தமிழ் மற்றும் தெலுங்கில் கவுதம் மேனனே படத்தை தயாரிக்கப் போகிறாராம், இதற்காக தெலுங்கில் ஒரு நல்ல தயாரிப்பாளரை தேடி வருகிறார் கவுதம் மேனன். படம் 3 மொழிகளில் வெளியாகலாம் என்றும் வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிடுவார்கள் என்றும் கூறுகின்றனர்.

கதை என்ன

கதை என்ன

4 நண்பர்கள் நீண்ட வருடங்கள் கழித்து திருமணம் ஒன்றில் சந்திக்கின்றனர், மீண்டும் பிரிவதற்கு முன்பாக நால்வரும் இணைந்து ஒரு சுற்றுலா செல்கின்றனர். அதன் பின்னர் அவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களே படத்தின் கதையாம், இதனை காமெடி கலந்து எடுக்க கவுதம் திட்டமிட்டு வருகிறார்.

ராம் சரண்

ராம் சரண்

இதற்கிடையில் தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் கவுதம் மேனன். தனி ஒருவன் படத்தின் ரீமேக்கில் ராம் சரண் நடித்து முடித்ததும் இந்தப் படம் தொடர்பான வேலைகள் தொடங்கப் படவிருக்கிறது.

English summary
Director Gautham Menon Currently Working on Tamil-Telugu bilingual film Achcham Yenbadhu Madamaiyada with Simbu and Naga Chaitanya. next Gautham Menon plans a multi- lingual Project with Simbu, Allu arjun, Fahadh Faasil and Puneeth Rajkumar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil