»   »  தன்னை ஹீரோயினாக்கிய இயக்குனரையே ரகசிய திருமணம் செய்த நடிகை

தன்னை ஹீரோயினாக்கிய இயக்குனரையே ரகசிய திருமணம் செய்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகை கவுதமி நாயர் தன்னை ஹீரோயினாக்கிய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

கேரளாவை சேர்ந்தவர் கவுதமி நாயர்(25). அவர் துல்கர் சல்மான் ஜோடியாக செகண்ட் ஷோ படத்தில் நடித்தார். இது தான் துல்கர் சல்மான், கவுதமி நாயர் ஆகிய இருவருக்கும் முதல் படம்.

Gauthami Nair marries 'Second Show' Director Srinath Rajendran

இந்த படத்தில் நடிக்கும்போதே கவுதமிக்கும், ஸ்ரீநாத்திற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கவுதமியின் சொந்த ஊரான ஆழப்புழாவில் வைத்து அவர்களின் திருமணம் நேற்று ரகசியமாக நடந்தது.

திருமண நிகழ்ச்சியில் கவுதமி, ஸ்ரீநாத் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டனர். அதன் பிறகு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் கலந்து கொண்டார்.

கவுதமி தனது காதலரின் பெயரை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் திருமணமே நடந்துவிட்டது.

English summary
Gauthami Nair, the young malyalam actress tied the knot with her longtime boyfriend, the young film-maker Srinath Rajendran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil