»   »  பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரியை எப்படி அனுப்புவதுன்னு தெரிஞ்சிடுச்சே!

பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரியை எப்படி அனுப்புவதுன்னு தெரிஞ்சிடுச்சே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து சக்தி போனால் தன்னையும் அனுப்பிவிடுமாறு காயத்ரி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் பார்வையாளர்கள் யாருக்குமே பிடிக்காத ஆள் என்றால் அது காயத்ரி ரகுராம் தான். அவரை பிக் பாஸ் எப்பொழுது வெளியே அனுப்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Gayathri doesn't want to stay in Big Boss house without Sakhthi

பிக் பாஸோ காயத்ரியை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளார். கமல் ஹாஸனும் காயத்ரியின் அடாவடிகளை கண்டும் காணாதது போன்று உள்ளார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இன்றைய ப்ரொமோ வீடியோவில் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் மூன்று பேர் உள்ளீர்கள் என்று கமல் கூற சக்தி, ஆரவ், சினேகனை காட்டுகிறார்கள். சக்தி போனால் என்னையும் அனுப்பிவிடுங்கள் என்று கூறி ஃபீல் பண்ணுகிறார் காயத்ரி.

சக்தியை அனுப்புங்க, கூடவே காயத்ரியும் போகட்டும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

சினேகன் போனால் ரைசாவுக்கு ஃபீல் ஆகுமாம். காயத்ரியை பிக் பாஸ் வீட்டில் இருந்து எப்படி வெளியே அனுப்புவது என்பதற்கான விடையை அவரே அளித்துள்ளார்.

English summary
Big Boss contestant Gayathri said that she doesn't want to stay in the house without her good friend Sakthi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil