»   »  மீம்ஸ் கிரியேட்டர்களை சிறுமி ஹாசினியை கொன்றவனுடன் ஒப்பிட்ட காயத்ரி ரகுராம்

மீம்ஸ் கிரியேட்டர்களை சிறுமி ஹாசினியை கொன்றவனுடன் ஒப்பிட்ட காயத்ரி ரகுராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடுமையான மீம்ஸ் கிரியேட்டர்கள் ஹாசினி மற்றும் தனது தாயை கொன்றவருக்கு சமம் என்கிறார் காயத்ரி ரகுராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து காயத்ரி ரகுராம் மீது ரசிகர்கள் கோபமாக உள்ளனர். அவர் ட்விட்டரில் என்ன தெரிவித்தாலும் கலாய்க்கிறார்கள், திட்டுகிறார்கள், மீம்ஸ் போடுகிறார்கள்.

இந்நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் குறித்து காயத்ரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ட்ரோல்

மீம் கிரியேட்டர்ஸ் மற்றும் ட்ரோல் ஸ்டாக்கர்ஸ். காரணமே இல்லாமல் 100 கணக்கு துவங்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் எப்படி உள்ளார்கள் என்பதை பார்க்க விரும்புகிறேன். அவர்களுக்கு வாழ்க்கை என்று ஒன்று உள்ளதா? ஏன் இவ்வளவு கடுப்பு, மனஅழுத்தம். வேலை இல்லாமலா அல்லது பல தோல்விகளை பார்த்ததாலா?

ஸ்க்ரிப்ட்

அவர்களின் கற்பனையை ஸ்க்ரிப்ட் எழுத அல்லது வேறு ஏதாவது உருப்படியாக பயன்படுத்தலாம். அவர்களின் திறமையை கண்டு வியக்கிறேன். அதிலும் குறிப்பாக அடுத்தவர்களை அசிங்கப்படுத்துவது. பிரபலங்களை அசிங்கப்படுத்துவதற்கு முன்பு அவர்கள் குடும்பத்தாரை வைத்து டிரை பண்ணலாம். ஜாலிக்காக யாரையும் காயப்படுத்தக் கூடாது.

ஹாசினி

கடுமையான மீம் கிரியேட்டர்கள், ட்ரோல் ஸ்டாக்கர்களை குழந்தை ஹாசினி மற்றும் தனது தாயை கொன்றவனுடன் ஒப்பிடுகிறேன். மனதளவில் பாதிக்கப்பட்டவர். அவர்களின் நண்பர்கள், குடும்பத்தாருக்கே அவர்கள் ஆபத்தாக மாறக்கூடும். அத்தகையவர்கள் பற்றி புகார் கொடுக்க வேண்டும்.

மீம்ஸ்

அது போன்றவர்கள் என்னை பின்தொடர்வதால் நான் கூறவில்லை. எனக்கு தெரிந்த பல பிரபலங்களையும் பின்தொடர்கிறார்கள். இந்த மீம் கம்பெனிகள், ஸ்டாக்கர்களை குறித்து புகார் தெரிவிக்க வேண்டும்.

வருமானம்

அடுத்தவர்களை கிண்டல் செய்து மீம் போட்டு தான் சம்பாதிக்கிறார்கள் இந்த ஸ்டாக்கர்கள் என்பது அவர்களின் பெற்றோருக்கு தெரிய வேண்டும். தாங்கள் செய்வதை நினைத்து அவர்கள் பெருமைப்படவில்லை என்று நம்புகிறேன் என காயத்ரி ட்வீட்டியுள்ளார்.

English summary
Gayathri Raghuram tweeted that, 'I compare the troll stalkers and harsh meme creators to the guy who killed Hasini child, and his own mother. Mentally affected guy. They can be dangerous in life to someone like their friends and family. Such guys should be reported.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X