»   »  தமிழ் வெறி, தமிழர்கள்னு சொல்லிக்கிட்டு தமிழச்சியை திட்டுவீங்க: காயத்ரி ரகுராம் விளாசல்

தமிழ் வெறி, தமிழர்கள்னு சொல்லிக்கிட்டு தமிழச்சியை திட்டுவீங்க: காயத்ரி ரகுராம் விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நெட்டிசன்ஸை ஒழிக்க சபதம் எடுத்திருக்கும் பிக் பாஸ் காயத்ரி!- வீடியோ

சென்னை: தமிழர்கள், தமிழ் வெறி என்று சொல்லிக் கொண்டு தமிழச்சியான தன்னை திட்டியவர்களை ட்விட்டரில் விளாசியுள்ளார் காயத்ரி ரகுராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு தமிழச்சியாக இருந்தும் தன்னை தமிழர்கள் ஆதரிக்கவில்லை என்ற தனது ஆதங்கத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி

மோடிஜி இல்லாமல் வேறு யார் நமக்கு உதவி செய்யப் போகிறார்கள்? பார்ட்டி, போதையில் பப்பு பிசியாக இருப்பார் என்று காயத்ரி ரகுராம் ட்வீட்டியுள்ளார். ராகுலை தான் அவர் பப்பு என்று கூறியுள்ளார்.

போதை

காயத்ரியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இது மாதிரி பார்ட்டியா, இது மாதிரி டிரக்ஸால் போதையா என்று கேட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் வெறி

பிற மாநில ஹீரோயின்களை ஆதரித்து ஒரு தமிழ் பெண்ணை திட்டத் தான் உங்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு நீங்கள் தரம் தாழ்ந்தவர்கள், ஆனால் தமிழ் வெறி, தமிழர்கள் என்று பேசுவீர்கள் என்கிறார் காயத்ரி.

ஜூலியானா

தமிழர்களின் பெயரை கெடுத்த நீங்கள் மற்றும் சகோதரி ஜூலியானா போன்ற தமிழ் பெண்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம்

தன்னை ஆதரிக்க முடியாது என்று கூறியவரிடம், அப்போ உங்களை எல்லாம் கொள்ளை அடித்த திராவிடக் கட்சிகள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி.

English summary
Gayathri Raghuram tweeted that, 'U all only know to abuse a Tamil woman than support heroins from other state that’s how low u ppl are and talk about tamil veri and Tamilians.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X