»   »  அன்பு முத்தம் கொடுத்து, பாச முத்தம் வாங்கிய காயத்ரி: கடுப்பில் பார்வையாளர்கள்

அன்பு முத்தம் கொடுத்து, பாச முத்தம் வாங்கிய காயத்ரி: கடுப்பில் பார்வையாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றபோது காயத்ரிக்கு கமல் ஹாஸன் முத்தம் கொடுத்தது பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.

பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களில் பார்வையாளர்களால் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம். அவரை வெளியேற்ற ஓட்டு போட்டு பார்வையாளர்கள் ஏமாந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டார்.

மேடைக்கு வந்த காயத்ரியிடம் பார்வையாளர்கள் அவரின் திமிரான குணத்தை பற்றி தெரிவித்தனர்.

முத்தம்

முத்தம்

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கடைசி சில நாட்களாக மருத்துவ முத்தம் புகழ் ஆரவ் காயத்ரி ரகுராமுடன் தான் கூட்டணி வைத்திருந்தார். இந்நிலையில் அங்கிருந்து கிளம்பிய காயத்ரி ஆரவின் கன்னத்தில் முத்தமிட்டார்.

அன்பு முத்தம்

அன்பு முத்தம்

ஆரவின் கன்னத்தில் முத்தமிட்ட காயத்ரி இது மருத்துவ முத்தம் கிடையாது அன்பு முத்தம் என்றார். மேலும் 100வது நாள் முடிந்து அனைவரும் வெளியே வந்த பிறகு மறுநாள் தன் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

கமல்

கமல்

கமல் ஹாஸனை பார்த்த காயத்ரி தனது நெற்றியை காட்ட அவரும் முத்தமிட்டார். யாருக்குமே பிடிக்காத காயத்ரிக்கு கமல் முத்தம் கொடுத்தது யாருக்கும் பிடிக்கவில்லை.

காயத்ரி

காயத்ரி

பிக் பாஸ் வீட்டில் அவ்வளவு சேட்டை செய்த காயத்ரிக்கு இப்படி ஒரு சென்ட் ஆஃபா என்று நெட்டிசன்கள் குமுறிக் கொண்டுள்ளனர். அடுத்து ஆரவ் வெளியேற்றப்பட வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்புகிறார்கள்.

English summary
Audiences are not happy with the way Big Boss gave grand send off to Gayathri Raghuram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil