»   »  நல்லா கலாய்ங்க, என்ஜாய், உங்களை பார்த்தா கவலையாக இருக்கு: காயத்ரி ரகுராம்

நல்லா கலாய்ங்க, என்ஜாய், உங்களை பார்த்தா கவலையாக இருக்கு: காயத்ரி ரகுராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அவரிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட ஆர்.ஜே.பாலாஜி-வீடியோ

சென்னை: ட்விட்டரில் தன்னை கிண்டல் செய்பவர்களுக்காகவே ட்வீட் போட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். அவர் என்ன ட்வீட் போட்டாலும் கிண்டல் செய்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து காயத்ரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மீம்

இது சுதந்திர உலகம். அதனால் உணர்ச்சிகளை பகிர, எழுத, மீம்ஸ் போட, விமர்சிக்கலாம். என்ஜாய். நான் அறிவுரை வழங்கவில்லை எனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே கூறுகிறேன்.

ட்விட்டர்

என் ட்வீட்டுகளை பார்த்து கடுப்பாகுபவர்கள் என்னை ஃபாலோ செய்ய வேண்டாம். உங்களுக்கு பிடித்தவர்களையும், ரோல் மாடல்களையும் ஃபாலோ செய்யுங்கள்.

கோபம்

எனக்கு விரக்தியோ கோபமோ இல்லை. என்னை கலாய்த்து அவர்களின் நேரத்தை வீணடிக்கிறார்களே என்று கவலையாக உள்ளது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனஅழுத்தத்தை பார்க்க முடிகிறது.

வெட்டி

உங்களுக்கு பிடிக்காதவர்களை பற்றி ஏதாவது சொல்வது, டைம் பாஸ் செய்வது நாம் எல்லாம் எவ்வளவு வெட்டியாக உள்ளோம் என்பதையே காட்டுகிறது. கிண்டல் எப்பொழுதுமே முடியாத கதை.

English summary
Gayathri Raguram has tweeted that, 'Unfollow me. For those who get irritated by my tweets. Follow ur favourites and ur role models.'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil