For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கெத்தா ஆரம்பிச்சாங்க..இப்ப இப்படி மோதிக்கிறாங்களே.. ஹீரோயின், பெண் இயக்குனர் மாறி மாறி புகார்!

  By
  |

  கொச்சி: நடிகர்கள் சங்கத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பில், இப்போது ஒருவருக்கொருவர் புகார்களை தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார்.

  இந்த விவகாரம் தென்னிந்திய சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல ஹீரோ திலீப் கைது செய்யப்பட்டார்.

   டி.பி.கஜேந்திரனின் பட்ஜெட் சினிமா: படப்பிடிப்பு நடக்கும்போதே தற்கொலை செய்த பிரபல நடிகையின் தம்பி! டி.பி.கஜேந்திரனின் பட்ஜெட் சினிமா: படப்பிடிப்பு நடக்கும்போதே தற்கொலை செய்த பிரபல நடிகையின் தம்பி!

  பார்வதி, ரம்யா நம்பீசன்

  பார்வதி, ரம்யா நம்பீசன்

  அவரை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல், ரேவதி, கீது மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கூறினர். பின்னர் மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலகிய இவர்கள், 2017-ஆம் ஆண்டு திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்கினார்கள். இதில் திரைப்பட பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலரும் இணைந்தனர்.

  மஞ்சு வாரியர்

  மஞ்சு வாரியர்

  கடந்த வருடம், நடிகை மஞ்சு வாரியர் இந்த அமைப்பில் இருந்து திடீரென்று விலகினார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன், இந்த அமைப்பின் தலைவராக இருந்த, பெண் இயக்குனர் விது வின்சென்ட் விலகியுள்ளார். இவர் மலையாளத்தில் ஸ்டாண்ட் அப் என்ற படத்தை இயக்கியவர். கடந்த சில நாட்களுக்கு முன், தனது சொந்த மற்றும் அரசியல் காரணங்களுக்காக இதிலிருந்து விலகியதாகக் கூறினார்.

   குற்றச்சாட்டுகள்

  குற்றச்சாட்டுகள்

  பின்னர் பெண்கள் கூட்டமைப்பு மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார். 'நடிகர் திலீப்புக்கு ஆதரவு கொடுத்து வந்த இயக்குனர் உன்னி கிருஷ்ணன், நான் இயக்கிய படத்தைத் தயாரித்தார். இதற்காக பார்வதி, ரீமா கலிங்கல் உள்பட பலரும் என்னை விமர்சித்தனர். ஆனால், திலீப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நடிகர் முகேஷுடன் பார்வதி நடித்தபோது அதுபற்றி யாரும் எதுவும் பேசவில்லை.

  ஸ்டெபி சேவியர்

  ஸ்டெபி சேவியர்

  இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் செயல்படுகிறார்கள். இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை முதலில் நடிகை பார்வதியிடம்தான் கொடுத்தேன். அவர் படித்ததாகவோ, அதில் நடிக்க முடியாது என்றோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை' என்று புகார் கூறியிருந்தார். இவரை அடுத்து, ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெபி சேவியரும் இந்த அமைப்பு மீது புகார் தெரிவித்தார்.

  ஒப்பந்தம் போடாமல்

  ஒப்பந்தம் போடாமல்

  'அமைப்பில் உள்ள பெண் இயக்குனர் ஒருவரின் படத்தில் ஒப்பந்தம் போடாமல் பணியாற்றினேன். சம்பளம் கேட்டபோது 'நீ பிறக்கும்போதே நான் சினிமாவில் இருக்கிறேன்' என்று கூறிவிட்டு என்னை நீக்கிவிட்டார். பிறகு என் உதவியாளரை வைத்து படப்பிடிப்பை நடத்தினார். இவர்களே பெண்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றனர் என அந்த இயக்குனர் யார் என்று குறிப்பிடாமல் தனது பதிவில் தெரிவித்திருந்தார், ஸ்டெபி.

  கீது மோகன்தாஸ்

  கீது மோகன்தாஸ்

  இந்நிலையில், இதை மறுத்துள்ள இயக்குனரும் நடிகையுமான கீதுமோகன் தாஸ், 'நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் தவறானது. உங்களை பலமுறை பேச அழைத்தும் வரவில்லை. செல்லும்போது நீங்கள் கொடுத்திருந்த காஷ்ட்யூம்களையும் யாரிடமும் சொல்லாமல் எடுத்துச் சென்றுவிட்டதாக எனது டீம் சொன்னது. பணம் கொடுத்தால் மட்டுமே, அதை திருப்பிக் கொடுப்பேன் என்று உங்கள் தரப்பில் கூறப்பட்டது.

  உண்மை இருக்கிறதா?

  உண்மை இருக்கிறதா?

  அதனால், நீங்கள் தயாரித்த காஷ்ட்யூமை பயன்படுத்தவில்லை. அதற்குள் உங்கள் பாக்கிகளை தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார். எங்கள் மீது குற்றம் சுமத்தும் நீங்கள், படம் ரெடியாகி கொண்டிருக்கும்போதே ஏன் புகார் செய்யவில்லை? அதில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறதா என்பதை நெஞ்சைத் தொட்டுக் கேளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்தப் பிரச்னை மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சங்கத்துக்கு எதிராக கெத்தாக ஆரம்பிக்கப்பட்டச் சங்கம் இப்படியாயிடுச்சே என்கின்றனர் ரசிகர்கள்.

  English summary
  Geetu Mohandas hits back at Stephy, slams designer for 'misinformation of facts'
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X