»   »  கெத்து வரிவிலக்கு வழக்கு... விசாரணை ஜன 27-க்கு ஒத்தி வைப்பு

கெத்து வரிவிலக்கு வழக்கு... விசாரணை ஜன 27-க்கு ஒத்தி வைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கெத்து திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கக் கோரி ரெட்ஜெயன்ட் மூவீஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதுதொடர்பாக 'ரெட் ஜெயண்ட் மூவீஸ்' மேலாளர் எஸ்.சரவணமுத்து தாக்கல் செய்திருந்த மனுவில், "ஜனவரி 14-இல் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியிடப்பட்ட 'கெத்து' திரைப்படத்தின் பெயர் தமிழ் வார்த்தை இல்லை எனக் கூறி கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துள்ளனர். இதில், முழுக்க, முழுக்க அரசியல் உள்நோக்கம் உள்ளது. எனவே, படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.


Gethu tax free case adjourned

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, 'கெத்து' என்பது தமிழ் வார்த்தைக்கான ஆதாரங்களைக் கூறி வாதிட்டார்.


இதையடுத்து, விசாரணையை ஜனவரி 27-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

English summary
The Madras High Court has adjourned the Tax exemption case of Gethu movie to January 27th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil