Ghaati Box office: ‘காட்டி‘ கம்பேக் கொடுக்க முடியாமல் திணறும் அனுஷ்கா.. படத்தின் 4நாள் வசூல்!
சென்னை: அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி என அடுத்தடுத்து பல வெற்றிப்படத்தை கொடுதது தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அனுஷ்கா ஷெட்டி நடித்த காட்டி திரைப்படம், அண்மையில் தியேட்டரில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் நான்கு நாள் வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த அனுஷ்கா ஷெட்டி, இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்தார். உடல் எடை அதிகரித்த பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவள் சந்திப்பும் பிரச்சனை என்ன என்பதை சொல்லும் திரைப்பட இஞ்சி இடுப்பழகி படத்தில், குண்டான பெண்ணாக நடித்திருந்தார் அனுஷ்கா. ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவருடைய உடல் எடை குறையாமலே போனதால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தன.

நடிகை அனுஷ்கா ஷெட்டி: இதனால், கடந்த சில ஆண்டுகளாக படவாய்ப்பே இல்லாமல் இருந்த அனுஷ்கா ஷெட்டி கடைசியாக நடித்த "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. தற்போது அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தியேட்டரில் வெளியாகி உள்ள படம் 'காட்டி'. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஜெகபதி பாபு, ராஜு சுந்தரம், ஜான் விஜய், ஜிஷு சென் குப்தா, லாரிசா போனசி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
காட்டி படத்தின் கதை: அனுஷ்கா, விக்ரம் பிரபு வாழும் காட்டி மலை கிராமத்தில் போதைப்பொருள் இலைகள் வளர்கிறது. அதை மலையில் இருந்து மூட்டை மூட்டையாக சுமந்து வந்து கீழே உள்ள பெரிய வியாபாரிகளுக்கு கொடுக்கும் இல்லீகல் வேலையை அங்கு இருக்கும் மக்கள் செய்கின்றனர். இதன் மூலம் பெரிய முதலாளிகள் ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றனர். ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவின் அப்பா வேலை செய்யும் போது இறந்துவிட, இனி இந்த வேலையை செய்ய வேண்டாம் என்று அனுஷ்கா, விக்ரம் பிரபு முடிவு செய்து வேறு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். அதைத்தொடர்ந்து காட்டி மக்களின் நலனுக்காக அனுஷ்கா, விக்ரம் பிரபு இருவரும் சேர்ந்து, ஒரு பேக்டரி தொடங்கி காஞ்சா ஆயில் செய்து விற்பனை செய்கின்றனர். இதை தெரிந்து கொண்ட பெரும் முதலாளிகள் விக்ரம் பிரபுவை கொன்றுவிட, அதன் பின் அனுஷ்கா அனைவரையும் பழி தீர்ப்பது தான் படத்தின் கதை.
பெரும் நஷ்டம்: தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான 'காட்டி' திரைப்படம் முதல் நாளில் சுமார் 2 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாளில் ₹1.75 கோடி, மூன்றாவது நாளில் ₹1.15 கோடி வசூலை ஈட்டியது. நான்காவது நாளான நேற்று ரூ4 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளது. காட்டி திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் மொத்தம் ரூ 5.29 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இப்படத்தை தயாரிப்பு நிறுவனம் ₹12 கோடியில் தயாரித்த நிலையில், படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களால் படம் பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அனுஷ்கா ஷெட்டியின் முந்தைய படங்களான 'அருந்ததி', 'பாகமதி' மற்றும் 'பாகுபலி' போன்ற வசூல் சாதனைகளை இந்தப் படம் எட்டவில்லை.


Click it and Unblock the Notifications











