»   »  'கூமர்' பாடலுக்கு சுற்றிச் சுழன்று ஆடும் பெண்... செம வைரலாகும் வீடியோ!

'கூமர்' பாடலுக்கு சுற்றிச் சுழன்று ஆடும் பெண்... செம வைரலாகும் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'பத்மாவத்' படத்தில் இடம்பெற்ற 'கூமர்' பாடலுக்கு அமெரிக்க இந்தியர் மயுரி பண்டாரி என்பவர் ஐஸ் ஸ்கேட்டிங் நடனமாடி அசத்தியுள்ளார்.

'பத்மாவத்' திரைப்படத்தில் தீபிகா படுகோன் ஆடியுள்ள கூமர் நடனம் புகழ்பெற்றது.

அதேபோல அமெரிக்காவின் ஐஸ் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆடியுள்ள கூமர் நடனம் இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பத்மாவத்

பத்மாவத்

ரன்வீர் சிங், தீபிகா படுகோன் மற்றும் ஷாகித் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பத்மாவத்'. படம் வெளியாவதற்கு முன் பல்வேறு தடைகள் இருந்த போதிலும், அவை அனைத்தையும் தகர்த்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 'பத்மாவத்'.

கூமர் பாடல்

'பத்மாவத்' படத்தில் இடம்பெற்ற 'கூமர்' பாடல் செம வைரலானது. இந்தப் பாடலுக்கு சிறப்பாக நடனமாடியிருந்தார் நாயகி தீபிகா படுகோன். 'கூமர்' பாடல் தற்போது வெளிநாடுகளிலும் பிரபலமாகி வருகிறது.

அமெரிக்க வாழ் இந்தியர்

அமெரிக்க வாழ் இந்தியர்

ராஜஸ்தானைச் சேர்ந்த மயூரி பண்டாரி என்கிற ஐஸ் ஸ்கேட்டிங் வீராங்கனை அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். அமெரிக்க இந்தியரான மயூரி பண்டாரி 'கூமர்' பாடலுக்கு ஐஸ் ஸ்கேட்டிங் நடனமாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோவை யூ-ட்யூபில் வெளியிட்டுள்ளார்.

அசத்தல் டான்ஸ்

'கூமர்' பாடலுக்கு சுற்றிச் சுழன்று ராட்டினம் போல கரகரவென ஆடியிருக்கிறார் மயூரி பண்டாரி. ரசிகர்களின் பெரும் வரவேற்பால் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.

பேஸ்கட் பால் டான்ஸ்

இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து தொடரான என்பிஏவில் அமெரிக்க பெண்கள் இந்திய உடையணிந்து இந்தப் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர். இதுவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

English summary
Deepika Padukone's ghoomar dance in 'Padmaavat' is popular. American Indian ice skater Mayuri Bhandari danced for ghoomar song in ice skating court. Mayuri Bhandari's dnace on ice video is now on viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil