»   »  "பிசாசு" அப்பா புரமோஷன் வாங்கி "பேய்" ஆகிட்டாரு ஓய்!

"பிசாசு" அப்பா புரமோஷன் வாங்கி "பேய்" ஆகிட்டாரு ஓய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடிகர் ராதாரவி பேயாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருநாள், கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்துவரும் நடிகர் ஜீவா, அடுத்ததாக பேய் படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தினை அறிமுக இயக்குனர் ஹரி இயக்குகிறார். இவர் நடிகர் கமலிடம் உதவியாளராக இருந்தவர்.


ஜீவா நடிக்கும் முதல் பேய்ப்படமான இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இப்படத்திற்கு, ‘சங்கிலி புங்கிலி கதவைத் திற' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.


பழனியில் படப்பிடிப்பு...

பழனியில் படப்பிடிப்பு...

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் தொடங்கியது. இப்படத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, சூரி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசை.


அட்லி தயாரிப்பு...

அட்லி தயாரிப்பு...

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும், அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.


பேயாக ராதாரவி...

பேயாக ராதாரவி...

இந்நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ராதாரவி தான் இப்படத்தில் பேய் வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே, இவர் மிஷ்கினின் பிசாசு படத்தில் பேய்க்கு அப்பாவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சிரிப்பு பேய்...

சிரிப்பு பேய்...

இந்தப் படத்தில் தம்பி ராமையாவும், சூரியும் இருப்பதால் நிச்சயம் இந்தப் பேயும் நமக்கு கிச்சுகிச்சு மூட்டும் என எதிர்பார்க்கலாம்.


படம் வரட்டும். பார்த்து விட்டு பேய்த்தனமாக சிரிக்க ரசிகர்களும் ரெடிதான்!
English summary
Sangili Bungili Kadhava Thora (SBKT) is an upcoming film being produced by Atlee and directed by Hari. The latest information we have on this flick is that Radha Ravi plays the ghost in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil