»   »  பாட்டுப் பாடும் த்ரிஷா பேய்.. இது நாயகி கலாட்டா!

பாட்டுப் பாடும் த்ரிஷா பேய்.. இது நாயகி கலாட்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷா நடிக்கும் புதிய படம் நாயகி இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் அவர் பேயாக நடிக்கவிருக்கிறார்.

இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட த்ரிஷா கூறுகையில், "தற்போது ‘அரண்மனை-2' என்ற பேய் படத்தில் நடித்து வருகிறேன். இதில், இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறேன்.


ஆசை நிறைவேறிடுச்சு

ஆசை நிறைவேறிடுச்சு

இருந்தாலும், என்னை மையப்படுத்தி உருவாகும் ஒரு பேய் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. அது இந்த படம் மூலம் நிறைவேறி விட்டது.


பேய் பழிவாங்கும் கதை

பேய் பழிவாங்கும் கதை

இது பேய் படமா? அல்லது பழி வாங்கும் கதையா? என்று இப்போது சொல்ல முடியாது. படப்பிடிப்பு நடக்கும்போது இதுகுறித்து கூறுகிறேன். இப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானனது. 1980-களில் நடக்கும் கதையாக இது உருவாகவிருக்கிறது.


ரொம்பவே எதிர்ப்பார்க்கிறேன்

ரொம்பவே எதிர்ப்பார்க்கிறேன்

இப்படத்தில் நடித்திருக்கிற எல்லோருக்கும் அழகான கதாபாத்திரம். இப்படத்தில் எனக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் சரிசமமாக வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கோவி. இந்த படத்தை நான் ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்றார்.


பாட்டு

பாட்டு

இந்தப் படத்தில் முதல் முறையாக ஒரு பாடலும் பாடவிருக்கிறார் த்ரிஷா. அதுபற்றிக் கூறுகையில், "இந்த படத்தின் இசையமைப்பாளர் என்னை ஒரு பாடல் பாட வைக்கப்போவதாக கூறியிருக்கிறார். என்னை இரண்டு நொடிகள் பாடச் சொன்னாலே எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும். அப்படிப்பட்ட என்னை, இப்படத்தில் முழு பாடலை பாடவைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்," என்றார்.


English summary
Actress Trisha is playing a ghost role in newly launched Nayagi movie and she is also singing a song for this movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil