துணிவு BGM இப்படித்தான் இருக்குமாம்… அஜித் ரசிகர்களுக்காக ஜிப்ரான் கொடுத்த அல்டிமேட் அப்டேட்

சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் துணிவு படத்திற்காக டப்பிங் கொடுத்து விட்டனர்.

துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிளுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தின் பின்னணி இசை பற்றி ஜிப்ரான் அப்டேட் கொடுத்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்

அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்

அஜித்தின் துணிவு பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் நேருக்கு நேர் மோதவுள்ளார் அஜித். விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாவதால், அஜித் ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர். அஜித் - ஹெச் வினோத் - தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு அஜித் மெசேஜ்

ரசிகர்களுக்கு அஜித் மெசேஜ்

துணிவு படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ள மாட்டேன் என அஜித் கூறிவிட்டார். ஆனாலும், அஜித்துக்குப் பதிலாக அவரது ரசிகர்கள் தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். அதேபோல், அஜித்தும் ரசிகர்களுடன் போட்டோ எடுத்து சைலண்டாக ப்ரோமோஷன் நடத்தி வருவதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று தனது மேனேஜர் மூலம் ரசிகர்களுக்கு ஒரு மெசேஜ்ஜை ஃபார்வர்டு செய்துள்ளார் அஜித்.

வாழு வாழ விடு

வாழு வாழ விடு

அதில், "உங்களை எப்போதும் ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவர்களை மட்டும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எந்த எதிர்மறை எண்ணங்களுக்கும் தேவையற்ற விஷயங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டாம். உங்கள் இலக்கை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே இருங்கள். எப்போதும் உற்சாகத்தோடு இருங்கள். இனி நல்லவைக்கான நேரம்! நேர்மறை எண்ணங்கள் மட்டும் மனதில் கொள்ளுங்கள். பொறாமையோ வெறுப்போ வேண்டாம்! உங்களுக்குள் இருக்கும் சிறப்பான திறனை வெளிக்காட்டுங்கள். வாழு... வாழவிடு..." என ஸ்மார்ட்டாக கூறியுள்ளார்.

ஜிப்ரான் ட்வீட்

ஜிப்ரான் ட்வீட்

அஜித்தின் தத்துவம் அவரது ரசிகர்களிடம் வைரலாகி வந்த நிலையில், துணிவு இசையமைப்பாளர் ஜிப்ரானும் ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை கூட்டியுள்ளார். ஏற்கனவே துணிவு படத்தின் மூன்று பாடல்களும் ரெடியாகிவிட்ட நிலையில், அடுத்து பின்னணி இசைக்கான வேலை வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அதீத சிந்தனையோடு வேலை செய்து கொண்டிருக்கும் ஜிப்ரான், அந்த போட்டோவை தனது ட்வீட்டரில் 'Working' என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்துள்ளார். இதனால், துணிவு படத்திற்கான பிஜிஎம் வேலைகள் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 3 பாடல்கள்

மொத்தம் 3 பாடல்கள்

துணிவு படத்தில் அஜித்தின் கெத்து சாங், ஒரு குத்து சாங் என இந்த இரண்டு பாடல்கள் போக, மேலும் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். அது, 'காசேதான் கடவுளடா' என்ற டைட்டிலில் ராப் சாங்காக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை பின்னணியாக வைத்து ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளதால், பிஜிஎம் மங்காத்தா பட பாணியில் செம்ம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஜிப்ரானும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் என உறுதி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X