»   »  காதல் இல்லை... டூயட் இல்லை... ‘கில்லி பம்பரம் கோலி’!

காதல் இல்லை... டூயட் இல்லை... ‘கில்லி பம்பரம் கோலி’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கில்லி பம்பரம் கோலி... இப்படி ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கிறது, நமது மண்ணின் பாரம்பர்ய விளையாட்டுகளின் பின்னணியில்.

இந்தப் படத்தை ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் சார்பில் டி. மனோஹரன் தயாரித்து, அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.


Gilli Pambaram Goli

கபாலிக்குப் பிறகு முழுக்க முழுக்க மலேஷியாவில் படமாக்கப்பட்டுள்ளது இந்தப் படம். காதல், டூயட் பாடல்கள் என எதுவும் இல்லாமல், நட்பை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது கில்லி பம்பரம் கோலி.


இப்படத்தில் புதுமுகங்களான தமிழ், பிரசாத், நரேஷ் என மூன்று பேர் கதையின் நாயகர்களாகவும், தீப்தி ஷெட்டி கதையின் நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். வில்லனாக சந்தோஷ்குமார் அறிமுகம் ஆகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கஞ்சாகருப்பும் தலைவாசல் விஜய்யும் நடித்துள்ளனர்.


இசை பிரசாத், ஒளிப்பதிவு நாக கிருஷ்ணா.


இயக்குநர் மனோஹரன் கூறுகையில், "படம் பார்க்க வருபவர்கள் ஒரு சில நிமிடங்களிலேயே புதுமுகங்களின் படம் என்பதை மறந்து படத்துடன் ஒன்றிவிடுவார்கள். அந்த அளவுக்கு தமிழ், பிரசாத், நரேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த ஆண்டின் சிறந்த புதுமுகத்துக்கான விருது தன் அறிமுகத்துக்கு கிடைக்கும் எனும் அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது," என்கிறார்.

English summary
Gilli Pambaram Goli is a movie based on traditional village sports and friendship.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil