twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விவசாயிகளின் துயர் நீக்கும் நிகழ்வாக மாறிய ‘கிரகணம்’ பட விழா!

    By Shankar
    |

    டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத்துக்கு கிரகணம் படக்கழு கணிசமான நிதி வழங்கியது.

    பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'கிரகணம்'. இளன் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்.

    Girahanam crew helps farmers family

    கிருஷ்ணா, கயல் சந்திரன் என இரண்டு ஹீரோக்கள். கதாநாயகியாக நந்தினி என்கிற புதுமுகம் நடித்துள்ளார். '8 தோட்டாக்கள்' படத்திற்கு இசையமைத்த சுந்தர மூர்த்தி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குநர் எஸ். ஆர்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் டில்லியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள் அல்லவா..? அதில் உயிர்நீத்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இந்த விழாவில் படத்தயாரிப்பாளர் சார்பாக ஒரு கணிசமான நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் அபி சரவணன் செய்திருந்தார்.

    Girahanam crew helps farmers family

    படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவா பேசும்போது, "ஒரு படத்தில் பணியாற்றும் நட்சத்திரங்கள் அனைவரும் படப்படிப்பு முடிவடைந்தவுடன் தங்களது பணி முடிவடைந்து விட்டது என ஒதுங்கிக்கொள்ளாமல், அந்தப்படம் ரிலீசாகும் நாள் வரை, மறுக்காமல் தங்கள் ஒத்துழைப்பை அந்தப்படத்திற்கு கொடுக்கவேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.

    படத்தின் நாயகன் கிருஷ்ணா பேசும்போது, "இந்தப்படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் இளன்தான். இளனை நான் சந்திக்கும்போது அவருக்கு 21 வயது. இந்தப்படத்தின் கதையை வெறும் இருபது நிமிடம் மட்டுமே இளன் என்னிடம் சொன்னார்.. படத்தில் நான் அணியும் ஆடைகளைக் கூட எனக்கு பிடித்த மாதிரி என் சொந்த ஆடைகளையே அணிய சொல்லிவிட்டார்," என்றார்.

    பாகுபலி-2 படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்த கே புரடக்சன்ஸ் ராஜராஜன் பேசும்போது, "நாங்கள் கடந்த சில வருடங்களாக படம் தயாரிக்கலாம் என நினைத்து நல்ல துடிப்பான இயக்குனர்கள் யார் என தேடியபோது பல இடங்களிலும் இளன் என்கிற பெயர் அடிபட்டது.. இப்போதுதான் அவரை பார்க்கிறேன்.. அவருடன் விரைவில் படம் பண்ணும் நேரம் வரும் என நம்புகிறேன்," என்று கூறினார்.

    Girahanam crew helps farmers family

    படக்குழுவினர் பேசியதில் இருந்து கிடைத்த சில சுவாரஸ்ய தகவல்கள்...

    இந்தப்படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டுமே, அதுவும் இரவு 12 மணிமுதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்படியும் கூட 35 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குநர் இளன்.

    இதில் இரண்டு கதாநாயகர்கள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் எதுவும் இல்லையாம்.

    நாயகன் கிருஷ்ணா பேசும்போது தனது அண்ணன் இயக்குனர் விஷ்ணுவர்தன் தாடிவைத்த ரகசியத்தை உடைத்தார். அதாவது 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் கதையை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தபோது விஷ்ணுவர்தனுக்கு வயது 22 தான். அதனால் சின்னப்பையனாக இருக்கிறானே என அவரை நம்பி யாரும் வாய்ப்பு தர முன்வரவில்லையாம். அதனால் தான் அவரது தந்தை பட்டியல் சேகரே தயாரிப்பாளராக மாறினாராம். அதன்பின் பெரிய ஆளாக தெரிவதற்காக தாடி வைத்துக்கொண்ட விஷ்ணுவர்தன் இன்றுவரை தாடியை எடுக்காமல் அப்படியே மெயின்டெய்ன் பண்ணி வருகிறாராம்.

    இந்தப்படத்தில் கொஞ்சம் ஆர்ட்டிஸ்ட் வேல்யூ வேண்டும் என்பதற்காக தானே சொந்த முயற்சி எடுத்து ஜெயபிரகாஷ், கருணாஸ், கருணாகரன் ஆகியோரை குறைந்த சம்பளத்தில் கன்வின்ஸ் செய்து நடிக்க அழைத்து வந்தாராம் கிருஷ்ணா. அவர்களும் நிறைவான கேரக்டர்கள் என்பதால் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு நடித்தார்களாம்.

    Read more about: farmers கிரகணம்
    English summary
    Girahanam movie crew has donated a big amount to farmers family those lost their lives at Delhi Protest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X