3வது குழந்தை ஆன் தி வே.. நிறைமாத கர்ப்பத்துடன் கலக்கல் போட்டோஷூட் நடத்திய கீதாஞ்சலி செல்வராகவன்!
சென்னை: இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் நிறை மாத கர்ப்பத்துடன் எடுத்துள்ள கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் செல்வராகவன் மற்றும் இரண்டாவது மனைவியான கீதாஞ்சலிக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில், இப்போ மூன்றாவது குழந்தையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மற்றொரு புறம் இயக்குநர் செல்வராகவன் மண்டையை பிய்த்துக் கொண்டு அடுத்த கதையை உருவாக்க ரெடியாகி விட்டார்.

முதல் மனைவி
நடிகர் தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் 2006ம் ஆண்டு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தனது படத்தில் நாயகியாக நடித்த நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக, 2010ல் விவாகரத்து செய்து கொண்டனர்.
2ம் தாரமான உதவி இயக்குநர்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த கீதாஞ்சலியை 2011ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார். தற்போது மூன்றாவது முறையாக கீதாஞ்சலி கர்ப்பமாகி உள்ளார். அந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் வித விதமாக போட்டோஷூட் நடத்தி மிரட்டி வருகிறார்.
2 குழந்தைகள்
2011ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி கீதாஞ்சலியை திருமணம் செய்த நிலையில், 2012ம் ஆண்டு ஜனவரி மாதமே பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைக்கு லீலாவதி என பெயர் வைக்கப்பட்டது. அடுத்து 2013ம் ஆண்டு அந்த தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஓம்கார் என பெயர் சூட்டப்பட்டது.
நிறை மாத கர்ப்பிணியாக
கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து, மூன்றாவது முறையாக கீதாஞ்சலி செல்வராகவன் தனது மூன்றாவது குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். நீண்ட லாக்டவுனில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் குழந்தைகளை பெற்றுக் கொண்டும், கருவுற்றும் வந்த நிலையில், அந்த பட்டியலில் கீதாஞ்சலியும் இணைந்துள்ளார். நிறை மாத கர்ப்பிணியாக அவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தொடை தெரிய
அதுவும் சாதாரணமாக ப்ரீ பர்த் போட்டோஷூட்டை கீதாஞ்சலி செல்வராகவன் மனைவி எடுக்கவில்லை. படு கிளாமராக, குட்டி டிராயர் போட்டுக் கொண்டு, தொடை தெரிய, மாடர்ன் உடை அணிந்த படி அவர் எடுத்த போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.
உடலை ஒட்டியபடி
இன்னொரு போட்டோஷூட் புகைப்படத்தில், உடலை ஒட்டிய கிளிட்டர் ஆடையை அணிந்து கொண்டு, பேபி பம்ப் நல்லா தெரியும் படி ஒரு மகா ராணியை போல கிரீடம் எல்லாம் வைத்துக் கொண்டு, கீதாஞ்சலி நடத்திய போட்டோஷூட் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. வரும் ஜனவரி மாதம் இயக்குநர் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினரின் மூன்றாவது குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











