»   »  விஜய் 62: அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?: சித்தார்த்

விஜய் 62: அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?: சித்தார்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil
வைரலாகும் சித்தார்த் ட்வீட்- வீடியோ

சென்னை: விஜய் படப்பிடிப்புக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சரி அல்ல என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தத்தால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சிறப்பு அனுமதி குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சமம்

ஒரு படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளித்தால் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தயவு செய்து அனுமதி கொடுங்கள். நாங்கள் அனைவரும் சமம் தான். ஒற்றுமை இல்லாவிடில் கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.

சினிமா

இந்த தமிழக அரசு சினிமாவை கண்டுகொள்ளவில்லை, கண்டுகொள்ளவும் செய்யாது. இதை அவர்கள் ஏற்கனவே நிரூபித்துவிட்டனர். அவர்கள் திடீர் என்று மாற ஏதாவது அதிசயம் தான் நடக்க வேண்டும். துறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். முதலில் ஒற்றுமையாக இருப்போம். அதன் பிறகு மாற்றம் ஏற்படும்.

அஜீத்

தமிழ் சினிமாவுக்கு பைசா பலனில்லாதது எது என்று தெரிய வேண்டும் என்றால் என் டைம்லைனில் உள்ள கடைசி 100 பதில்களை பார்க்கவும். அசிங்கமான பாஷை, தேவையில்லாத விஷம், சம்பந்தமில்லா கோபம். இரண்டு குரூப் வேலையில்லா முட்டாள்கள் அனைவரின் பெயரையும், நேரத்தையும் கெடுக்கிறார்கள். பாவம் விஜய்-அஜீத்.

கோபம்

கோபம்

சித்தார்த்தின் ட்வீட்டை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதால் தான் உங்களுக்கு வேலை உள்ளது என்கின்றனர்.

English summary
Actor Siddharth tweeted that, 'Every single film is an equal challenge in today's brutal cinema marketplace. If these special permissions to shoot are given to one, please give them to all producers. We are all the same. In the absence of equality and unity, god save us. #TamilCinema #Strike'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X