»   »  'தெறி'யை விட பெரிய ஹிட் கொடுக்கணும் தம்பி: விஜய்யை வாழ்த்திய தாணு

'தெறி'யை விட பெரிய ஹிட் கொடுக்கணும் தம்பி: விஜய்யை வாழ்த்திய தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 61 படம் தெறியை விட பெரிய ஹிட்டாக வேண்டும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வாழ்த்தியுள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 61 படம் இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் உள்ளனர்.

Gives us a bigger hit than #Theri: Thanu wishes Vijay

படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அதனாலேயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யன், வடிவேலு, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு ட்விட்டரில் நேற்று கூறியிருப்பதாவது,

இயக்குனர் அட்லீயை இன்று சந்தித்தேன். தெறியை விட பெரிய ஹிட் கொடுக்க அட்லீ, விஜய் தம்பி, தேனாண்டாள் பிலிம்ஸுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

தான் தயாரித்த தெறி படத்தை விட விஜய் 61 பெரிய ஹிட்டாக வேண்டும் என தாணு வாழ்த்தியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

English summary
Producer Kalaipuli S. Thanu tweeted that, ''Met Director Atlee_dir today. I wish Atlee, actorvijay thambi and ThenandalFilms to gives us a bigger hit than #Theri. All the best team :)''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil