For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிஆர்ஓ பணிக்கு பெருமை சேர்த்த கிளாமர் கிருஷ்ணமூர்த்தி - சில நினைவலைகள்

|

சென்னை: ஒரு சினிமா பி.ஆர்.ஓ நினைத்தால் தங்களுடைய சாமர்த்தியத்தினால், பட்ஜெட் குறைவாக இருக்கக் கூடிய படங்களைக் கூட சரியான முறையில் விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி தான். இன்று அவருடைய 8அவது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி இன்றைக்கு இருக்கும் இளம் நடிகர்களை வரை அனைவரின் படங்களிலும் பி.ஆர்.ஓ வாக பணியாற்றி தனது பணிக்கு பெருமை சேர்த்தவர் கிருஷ்ணமூர்த்தி.

சினிமா துறையில் எத்தனையோ விதமான கிராஃப்ட் உண்டு- மக்களை மிகவும் கவர்ந்தது நடிகர்களை மட்டுமே தான், பொதுவாகவே நடிகர்கள் திரையில் தோன்றும்போது விசிலடித்து ஆரவாரம் செய்து சந்தோஷமாக மகிழ்கின்றனர் மக்கள். ஒரு நல்ல சினிமா வெற்றிகரமாக ஓடுவதற்கு பல காரணம் உண்டு.

Glamour Krishnamurthy’s 8th Death anniversary

அதற்கு மிகவும் முக்கியம் ஒரு நல்ல இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், வசனகர்த்தா என இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

எத்தனையோ துறைகள் இருந்தாலும் பொதுவான மக்களுக்கு தெரியாத ஒரு விஷயம் தான் இந்த பி.ஆர்.ஓ(PRO).பிஆர்ஓ என்றால் மக்கள் தொடர்பு அதிகாரி (Public Relation Officer) என்று கூறுவார்கள். ஒரு நல்ல படைப்பை ஒரு நல்ல சினிமாவை மக்களிடம் கொண்டு செல்வதும், பத்திரிக்கையாளர்கள் மூலமாக அவற்றை விளம்பரப்படுத்துவது, இன்னும் பல விஷயங்களை செய்வது இந்த பி.ஆர்.ஓ தான்.

என்றும் நினைவில் நிற்கும் பஞ்சு அருணாசலம்... மறக்க முடியாத மணமகளே மருமகளே வா வா

திரைக்குப் பின்னால் வேலை செய்யும் எத்தனையோ சினிமா திறமைசாலிகளை இன்றைக்கும் மக்கள் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான வருத்தத்திற்குறிய உண்மை. ஒரு சினிமா பி.ஆர்.ஓ நினைத்தால் தங்களுடைய சாமர்த்தியத்தினால், பட்ஜெட் குறைவாக இருக்கக் கூடிய படங்களைக் கூட சரியான முறையில் விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். எத்தனையோ பெரிய நடிகர்களுக்கும், தனியார் அலுவலகங்களுக்கும் கூட தனிப்பட்ட முறையில் பி.ஆர்.ஓ வேலை செய்வது உண்டு.

Glamour Krishnamurthy’s 8th Death anniversary

ஒரு திரைப்படத்திற்கு முழுவதுமாக பிரமோஷன்களை எடுத்துக்கொண்டு விளம்பரப்படுத்துவது பி.ஆர்.ஓ க்களின் மிக முக்கியமான கடமை. இவர்கள் தலையில், இவர்கள் மூளையில் தான் எத்தனை செல் நம்பர்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

காண்டாக்ட் (contact) தான் இவர்களுடைய மிகப்பெரிய பலம் யாரிடம் பேச வேண்டும் எப்பொழுது பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் எப்படி அந்த வேலையை முடிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் கச்சிதமாக வேலையை முடித்துக் கொடுப்பது ஒரு பிஆர்ஓ உடைய மிகப் பெரிய ஆளுமை ஆகும்.

Glamour Krishnamurthy’s 8th Death anniversary

டான்ஸ் யூனியன், ஸ்டண்ட் யூனியன், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போல பி.ஆர்.ஓ யூனியனும் உண்டு. சில குறிப்பிட்ட பி.ஆர்.ஓ க்கள் சில நடிகர்களுக்கு குடும்ப நண்பர்கள் ஆகவே மாறிவிடுகின்றனர். இவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி இன்றைக்கு இருக்கும் இளம் நடிகர்களை வரை அனைவரின் படங்களிலும் பி.ஆர்.ஓ வாக பணியாற்றி உள்ளார்.

மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் முதல் சுரேஷ் கிருஷ்ணா என முன்னணி இயக்குநர்களின் படங்களிலும், ஏ.வி.எம், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வரை முன்னணி பட நிறுவனங்களிலும் மக்கள் தொடர்பாளர் பணியை திறம்பட செயலாற்றி பி.ஆர்.ஒ பணிக்கு பெருமையும் சிறப்பும் சேர்த்தவர் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி.

குருநாதர் பிலிம் நியூஸ் ஆனந்தன் மீது அளவில்லா அன்பு கொண்டவர். பி.ஆர்.ஓ.யூனியனின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு எஸ்.வி.சேகரின் நாடகம் போட்டு அதில் வந்த தொகையை பூனியனின் வைப்புத் தொகையாக வைத்தவர். பத்திரிகையாளர்களிடம் இணக்கமான உறவை முகம் சுளிக்காமல் கடைபிடித்தவர். தமிழ் கடவுள் முருகன் மீது அளவில்லா அன்பும் பக்தியும் கொண்டவர். தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தவர்.

நேரம் தவறாமை, தொழில் மீது பற்று, புதியவர்களுக்கு வாய்ப்பு, சினிமா மீது ஈர்ப்பு,இதுதான் அவரது தினசரி அலுவல். திரை உலகில் முதன் முறையாக கிளாமர் சினி டைரி என்ற திரை உலகினரின் முகவரியுடன் தொலைபேசி எண்களையும் சேர்த்து வருடம் தோறும் புத்தகம் வெளியிட்டவர்.

தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றத்தார் மீது அளவு கடந்த அன்பு பாராட்டியவர். தனது உதவியாளர்களை மக்கள் தொடர்பாளர்களாக்கி அழகு பார்த்த பெருமை உடையவர்.

நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம், மீசையில் கருப்பு மை, சபாரி உடை, வேலுடன் கூடிய வண்டி, டிரைவ் இன் உட்லண்ட்ஸ், அக்கத்தில் கை பை, சிரித்த முகம், சட்டை பையில் இரு பேனாக்கள், கிளாமர் கிருஷ்ணமூர்த்தியின் நினைவுகள் எங்கள் காலம் உள்ளவரை மறக்காது, மறையாது, மாறாது.

தொழிலின் முன்னோடியான எங்கள் குருநாதரை இரு கரம் குவித்து சிரம் தாழ்த்திவணங்குகிறோம். என்றும் எங்கள் நினைவில் வாழும் அவர் நினைவை போற்றும் சீடர்கள். விஜயமுரளி, பெரு துளசி பழனிவேல், வெங்கட்ராமன், கிளாமர் சத்யா, மற்றும் ஒட்டு மொத்த பி ஆர் ஓவின் நலம் விரும்பிகள்.

English summary
Glamor Krishnamurthy is a good example of how a cinematic PRO can, with their ingenuity, properly advertise the budget-less films.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more