»   »  தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் நடிகர்கள்! - சிம்பு, வடிவேலுவைத் தாக்கிய ஞானவேல் ராஜா

தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் நடிகர்கள்! - சிம்பு, வடிவேலுவைத் தாக்கிய ஞானவேல் ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்பு, வடிவேலுவைத் தாக்கிய ஞானவேல் ராஜா- வீடியோ

சென்னை: சில நடிகர்கள் தொழில்முறையில்லாமல் நடந்து கொண்டு தயாரிப்பாளர்களை காயப்படுத்துகிறார்கள் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறினார்.

இன்று நடந்த அண்ணாதுரை பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஞானவேல் ராஜா, சிம்பு மற்றும் வடிவேலுவின் பெயர்களைக் குறிப்பிடாமல் இவ்வாறு பேசினார்:

Gnanavel Raja's attack on Simbu, Vadivelu

ஒவ்வொரு விஷயத்திலும் விஜய் ஆண்டனி தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகிறார். ஆனால் இதே தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார்கள் வந்திருக்கிறது.

ஒரு நடிகர் 29 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். எடுத்தவரை ரிலீஸ் செய்யுங்கள் என சொல்கிறார். அந்த நடிகரால் தயாரிப்பாளருக்கு ரூ 18 கோடி நஷ்டத்தில் இருக்கிறது.

ஒரு பிரபல காமெடி நடிகரும் அந்த புகாரில் சிக்கி, தயாரிப்பாளர்களைக் காயப்படுத்தி இருக்கிறார். அப்படிப்பட்ட சிலர் இருக்கும் இந்த இண்டஸ்ட்ரியில் விஜய் ஆண்டனி மாதிரி இரவு பகலாக உழைக்கும் நடிகர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மனதுக்காகவே படம் பெரிய வெற்றி பெறும்," என்றார் ஞானவேல் ராஜா.

English summary
Producer Gnanavel Raja has blamed Simbu and Vadivelu for incurring huge losses to producers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X